தேசிய செய்திகள்

பி.எம்.நரேந்திர மோடி திரைப்படத்தை வெளியிட தேர்தல் ஆணையம் விதித்த தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு + "||" + Modi biopic row: SC won't interfere; film to release after Lok Sabha elections

பி.எம்.நரேந்திர மோடி திரைப்படத்தை வெளியிட தேர்தல் ஆணையம் விதித்த தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பி.எம்.நரேந்திர மோடி திரைப்படத்தை வெளியிட தேர்தல் ஆணையம் விதித்த தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
பி.எம்.நரேந்திர மோடி திரைப்படத்தை வெளியிட தேர்தல் ஆணையம் விதித்த தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்து விட்டது.
புதுடெல்லி,

பிரதமர் நரேந்திரமோடி வாழ்க்கையை மையமாக வைத்து ‘பிஎம் நரேந்திரமோடி’ என்ற பெயரில் புதிய படம் தயாராகி உள்ளது. இதில் மோடி வேடத்தில் விவேக் ஓபராய் நடித்துள்ளார். பாராளுமன்ற தேர்தலையொட்டி ‘பி.எம். நரேந்திர மோடி’ படம் வெளியாக தேர்தல் ஆணையம் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. 

மோடியின் வாழ்க்கை வரலாறு படத்தை தேர்தல் முடியும் வரையில் வெளியிடக்கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.  இதனை எதிர்த்து தயாரிப்பாளர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. 
 
இந்த திரைப்படத்தில் அரசியல் பிரசாரம் கிடையாது, உத்வேகம் அளிக்கும் காட்சிகள் மட்டுமே இடம் பெற்றுள்ளது என தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு படத்தை தேர்தல் ஆணையத்திற்கு திரையிட தயாரிப்பாளருக்கு உத்தரவிட்டது.

மேலும் தேர்தல் ஆணையம் தனது அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த திரைப்படத்தை பார்த்த தேர்தல் ஆணையம், படத்தை வெளியிடக்கூடாது என குறிப்பிட்டு  சீலிட்ட உறையில் அறிக்கையாக வைத்து கடந்த ஏப்ரல் 22ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. 

இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவில் தலையிட முடியாது என கூறிய உச்ச நீதிமன்றம், எனவே, தேர்தல் முடியும் வரை ‘பி.எம். நரேந்திர மோடி’ படத்தை வெளியிட தடை விதித்தது. 

தொடர்புடைய செய்திகள்

1. மம்தாவை விமர்சித்து மீம்ஸ் வெளியிட்டதால் கைது செய்யப்பட்ட பாஜக பெண் நிர்வாகிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன்
மம்தாவை விமர்சித்து மீம்ஸ் வெளியிட்டதால் கைது செய்யப்பட்ட பாஜக பெண் நிர்வாகிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
2. அயோத்தி வழக்கில் மத்தியஸ்த குழு அறிக்கை தர அவகாசம் அளித்தது உச்ச நீதிமன்றம்
அயோத்தி வழக்கில் மத்தியஸ்த குழு அறிக்கை தர உச்ச நீதிமன்றம் அவகாசம் அளித்துள்ளது.
3. கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி
ஐ.என்.எக்ஸ். முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
4. பணம் மற்றும் அதிகாரம் படைத்தவர்கள் நீதித்துறையை ஒருபோதும் கட்டுப்படுத்த முடியாது: உச்சநீதிமன்றம்
பணம் மற்றும் அதிகாரம் படைத்தவர்கள் நீதித்துறையை ஒருபோதும் கட்டுப்படுத்த முடியாது என்று உச்சநீதிமன்றம் காட்டமாக தெரிவித்தது.
5. தலைமை நீதிபதிக்கு எதிரான பாலியல் புகார்: உஸ்தவ் பெய்ன்ஸ் என்ற வழக்கறிஞருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
தலைமை நீதிபதிக்கு எதிரான பாலியல் புகார் தொடர்பாக உஸ்தவ் பெய்ன்ஸ் என்ற வழக்கறிஞருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.