தேசிய செய்திகள்

பிரதமர் மோடியின் வருகைக்காக வாரணாசியை சுத்தம் செய்ய 1.4 லட்சம் லிட்டர் குடிநீர் செலவு + "||" + Varanasi uses 1.4 lakh litres of water to wash roads for Modi

பிரதமர் மோடியின் வருகைக்காக வாரணாசியை சுத்தம் செய்ய 1.4 லட்சம் லிட்டர் குடிநீர் செலவு

பிரதமர் மோடியின் வருகைக்காக வாரணாசியை சுத்தம் செய்ய 1.4 லட்சம் லிட்டர் குடிநீர் செலவு
பிரதமர் மோடியின் வருகைக்காக வாரணாசியை சுத்தம் செய்வதற்காக 1.4 லட்சம் லிட்டர் குடிநீர் செலவு செய்யப்பட்டுள்ளது.
இதனால் கோவில் நகரத்தில் சுமார் 30 சதவித மக்கள் குழாய் தண்ணீர் இல்லாமல் அவதியுறவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

பிரதமர் மோடி வாரணாசியில் பிரமாண்டமான பேரணியை மேற்கொண்டு வேட்புமனுவை தாக்கல் செய்தார். பிரதமர் மோடி வியாழன் அன்று பிரமாண்டமான பேரணியை கோவில் நகரத்தில் நடத்தினார். இதில் ஆயிரக்கணக்கான காவி தொண்டர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக நகரை சுத்தம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. பிரதமர் மோடி வருகையையொட்டி வாரணாசியில் புதன்கிழமை குடிநீரை கொண்டு சுத்தம் செய்யும் பணி நடைபெற்றுள்ளது என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

“பிரதமர் மோடி வருவதால் சாலைகளை சுத்தம் செய்ய எங்களுக்கு உத்தரவிடப்பட்டது, அதன்படி நாங்கள் பணிகளை மேற்கொண்டோம்,” என அதிகாரிகள் கூறியுள்ளனர். 

வாரணாசி மாநகராட்சியின் 40 தண்ணீர் டேங்கர்கள், 400 பணியாளர்கள் இந்த பணிக்காக இரவு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். வழக்கமாக வாரணாசியில் விழாக்காலங்களில்தான் இதுபோன்ற சுத்தம் செய்யும் பணி நடக்கும். வாரணாசி சர்வதேச சுற்றுலா மையமாக உள்ளது. நகரத்தில் 70 சதவித வீடுகள் மட்டும்தான் குழாய் மூலமாக தண்ணீர் இணைப்பை பெற்றுள்ளன. மற்ற வீடுகள் போர் தண்ணீரை நம்பியுள்ளன. இப்போது சாலையை சுத்தம் செய்ய பயன்படுத்தப்பட்ட நீரால் சுமார் 30 சதவீத மக்கள் தண்ணீரின்றி தவித்துள்ளனர் என தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. பாகிஸ்தான் வான்வெளியில் பிரதமர் மோடியின் விமானம் பறக்க தடை விதிப்பு
பாகிஸ்தான் வான்வெளியில் பிரதமர் மோடியின் விமானம் பறக்க அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
2. பிரதமர் மோடியுடன் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சந்திப்பு
பிரதமர் மோடியை மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி சந்தித்து பேசினார்.
3. ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் செப்டம்பர் 27-ம் தேதி பிரதமர் மோடி உரை; அதே நாளில் இம்ரான் கானும் பேசுகிறார்
நியூயார்க்கில் நடைபெறும் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் செப்டம்பர் 27-ம் தேதி பிரதமர் மோடி உரையாற்றுகிறார். அதே நாளில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் உரையாற்றவுள்ளார்.
4. நொய்டாவில் சுற்றுச்சூழல் மாநாடு: பிரதமர் மோடி பங்கேற்பு
உத்திர பிரதேச மாநிலம் நொய்டாவில் இன்று நடைபெற உள்ள சுற்றுச்சுழல் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
5. ஜனாதிபதியாவது எப்படி? பிரதமர் மோடியிடம் கேள்வி எழுப்பிய மாணவன்
ஜனாதிபதியாவது எப்படி என கேள்வி எழுப்பிய மாணவனுக்கு பிரதமர் மோடி ஆச்சரியம் கலந்த பதிலளித்து உள்ளார்.