தேர்தல் செய்திகள்

ஜனநாயகம் வெற்றியடைய வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம் - பிரதமர் மோடி + "||" + Democracy Must Win, Thats My Only Interest PM Modi

ஜனநாயகம் வெற்றியடைய வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம் - பிரதமர் மோடி

ஜனநாயகம் வெற்றியடைய வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம் - பிரதமர் மோடி
ஜனநாயகம் வெற்றியடைய வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கமாகும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
பிரதமர் மோடி 2019 தேர்தலில் வாரணாசி தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். இதற்காக வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தார். மிகப்பிரமாண்டமான பேரணியை நடத்தி வேட்பு மனுவை மோடி தாக்கல் செய்தார்.
 
ஆயிரக்கணக்கான தொண்டர்களிடம் பிரதமர் மோடி பேசுகையில், “இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் முதல் முறையாக ஆட்சிக்கு ஆதரவான அலை காணப்படுகிறது. இந்தியா முழுவதும் உள்ள மக்கள் இந்த அரசின் மீது நம்பிக்கையை கொண்டுள்ளனர். இதற்கு முன்னதாக அரசுகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இப்போதுதான் செயல்படும் அரசை மக்கள் பார்க்கிறார்கள். 

நான் பிரதமர் எனக் கூறி, யாரையும் சந்திக்க மறுக்கவில்லை. பணியாளர்களை சந்திக்க மறுக்கவில்லை. பிரதமராகவும், எம்.பி.யாகவும் என்னுடைய பணி என்னவென்று எனக்கு தெரியும். மோடி வெற்றிப்பெறலாம், பெறாமலும் போகலாம், ஆனால் ஜனநாயகம் வெற்றியடையும். வாக்களிப்பில் நீங்கள் சாதனையை உடைக்க வேண்டும். பெண்களின் வாக்களிப்பு விகிதம் 5 சதவீதம் உயர வேண்டும்,” எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. பிளாஸ்டிக் தடை திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த அமிர்கானுக்கு பிரதமர் மோடி நன்றி
பிளாஸ்டிக் தடை திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த அமிர்கானுக்கு பிரதமர் மோடி நன்றியை தெரிவித்துள்ளார்.
2. ஒன்றரை மாதத்தில் 3¾ கோடி புதிய உறுப்பினர்களை சேர்த்தது, பா.ஜனதா - திட்டமிட்ட இலக்கை தாண்டி சாதனை
ஒன்றரை மாதத்தில், 3¾ கோடி புதிய உறுப்பினர்களை பா.ஜனதா சேர்த்துள்ளது. திட்டமிட்ட இலக்கை தாண்டி சாதனை படைத்துள்ளது.
3. ‘ஜெய் ஸ்ரீராம்’ என முழக்கமிட்டு மம்தா பானர்ஜி காரை மறித்த 10 பேர் கைது
ஜெய் ஸ்ரீராம் என முழக்கமிட்டு மம்தா பானர்ஜி காரை மறித்த 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
4. ‘அபிநந்தனை பாகிஸ்தான் விடாமல் இருந்து இருந்தால்...’ பதட்டம் தொடர்பாக பிரதமர் மோடி பேச்சு
இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனை விடவில்லை என்றால் கடுமையான விளைவை சந்திக்க வேண்டியது இருக்கும் என பாகிஸ்தானை எச்சரித்தேன் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.