வாரணாசியில் பிரியங்கா காந்தி போட்டியிடாதது ஏமாற்றம் அளிக்கிறது - அருண் ஜெட்லி


வாரணாசியில் பிரியங்கா காந்தி போட்டியிடாதது ஏமாற்றம் அளிக்கிறது - அருண் ஜெட்லி
x
தினத்தந்தி 26 April 2019 3:01 PM GMT (Updated: 26 April 2019 3:01 PM GMT)

வாரணாசியில் பிரியங்கா காந்தி போட்டியிடாதது ஏமாற்றம் அளிக்கிறது என மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

வாரணாசியில் பிரதமர் மோடியை எதிர்த்து பிரியங்கா காந்தி போட்டியிடலாம் என்ற எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக காணப்பட்டது. அதனை உறுதி செய்யும் வகையில் பிரியங்கா காந்தியின் பேட்டியும் அமைந்தது. ஆனால்  இத்தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக அஜய் ராய் அறிவிக்கப்பட்டார். இதனால் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது, போட்டியை எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
 
இந்நிலையில் வாரணாசியில்  பிரியங்கா காந்தி போட்டியிடாதது ஏமாற்றம் அளிக்கிறது என மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

வாரணாசியில் பிரியங்கா காந்தி போட்டியிடவில்லை என்ற காங்கிரசின் முடிவு ஏமாற்றம் அளிக்கிறது. பிரியங்கா காந்தியின் பழங்கதைகள் அழிக்கப்பட்டது. வெற்றிகரமான ஒரு அரசியல் தலைவருக்கு எதிராக புதிதாக அரசியலுக்கு வந்துள்ள வாரிசின் தலையெழுத்தை வாரணாசி எழுதி புதிய இந்தியா உருவாக வாய்ப்பு ஏற்படும் என நம்பினேன். அவர்கள் நாளுக்கு 5 முறை சொல்லிக் கொள்ளும் புதிய இந்தியாவை அவர்களின் படைகள் ஈர்க்க தவறி விட்டது. அதனால் புதிய இந்தியா அவர்களுக்கு வாய்ப்பளிக்கவில்லை. அனுபவமில்லாத வாரிசுகளை ஏற்றுக் கொள்ள முடியாது என அருண் ஜெட்லி கூறியுள்ளார். 

Next Story