சர்வர் கோளாறு காரணமாக ஏர் இந்தியா விமான சேவை பாதிப்பு


சர்வர் கோளாறு காரணமாக ஏர் இந்தியா விமான சேவை பாதிப்பு
x
தினத்தந்தி 27 April 2019 2:25 AM GMT (Updated: 27 April 2019 3:15 AM GMT)

சர்வர் கோளாறு காரணமாக ஏர் இந்தியா விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி, 

சர்வர் கோளாறு காரணமாக ஏர் இந்தியா விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது   SITA சர்வரில் ஏற்பட்ட  கோளாறு காரணமாக அதிகாலை 3.30 மணி முதல் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. 

இந்தியா மட்டும் இல்லாது வெளிநாடுகளிலும் ஏர் இந்தியா விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வருகை, புறப்பாடு பற்றிய தகவல் கிடைக்காததால், டெல்லி உள்பட பல்வேறு விமான நிலையங்களில் பயணிகள் தவிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

இதற்கிடையே, சர்வர் கோளாறை சீர் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக ஏர் இந்தியா தெரிவித்து உள்ளது.  SITA சர்வர் கோளாறு சீர் செய்யப்பட்டு விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று ஏர் இந்தியா தெரிவித்து உள்ளது. 


Next Story