தேர்தல் செய்திகள்

ராகுல்காந்தி அமேதியில் தோல்வியுற்றால் நான் அரசியலைவிட்டு விலகுவேன் -சித்து + "||" + I will quit politics if Rahul loses in Amethi Navjot Singh Sidhu

ராகுல்காந்தி அமேதியில் தோல்வியுற்றால் நான் அரசியலைவிட்டு விலகுவேன் -சித்து

ராகுல்காந்தி அமேதியில் தோல்வியுற்றால் நான் அரசியலைவிட்டு விலகுவேன் -சித்து
ராகுல்காந்தி அமேதியில் தோல்வியுற்றால் நான் அரசியலைவிட்டு விலகுவேன் என நவ்ஜோத்சிங் சித்து கூறியுள்ளார்.
ராகுல் காந்தியின் அமேதி தொகுதியில் பா.ஜனதா மீண்டும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியை களமிறக்கியுள்ளது. ராகுல் காந்தியை தோற்கடிக்கும்  வியூகத்துடன் ஸ்மிருதி பணியாற்றி வருகிறார். முழு மூச்சாக அமேதியில்  ஸ்மிருதி இரானி பணியாற்றும் நிலையில், ராகுல் காந்தி தோற்கடிக்கப்படுவார் என கூறி வருகின்றனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார். தோல்வி பயத்தாலே அவர் கேரளாவிற்கு செல்கிறார் என பா.ஜனதா விமர்சனம் செய்தது.

இந்நிலையில், ராகுல் காந்தி அமேதியில் தோல்வியுற்றால் நான் அரசியலைவிட்டு விலகுவேன் என நவ்ஜோத்சிங் சித்து கூறியுள்ளார். 

தேசியவாதம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியாவிடம் பாடம் கற்கவேண்டும் என சித்து பேசியுள்ளார்.

ஏற்கனவே பா.ஜனதாவில் இருந்து பின்னர் காங்கிரசுக்கு சென்ற சித்து பஞ்சாப் மாநில காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.