பிரதமர் மோடி, அமித் ஷா, ராகுல் காந்தி மீதான புகார்கள் : தேர்தல் ஆணையம் இன்று முடிவு


பிரதமர் மோடி, அமித் ஷா, ராகுல் காந்தி மீதான புகார்கள் : தேர்தல் ஆணையம் இன்று முடிவு
x
தினத்தந்தி 30 April 2019 2:28 AM GMT (Updated: 30 April 2019 2:28 AM GMT)

பிரதமர் மோடி, அமித் ஷா, ராகுல் காந்தி ஆகியோர் மீதான புகார்கள் குறித்து தேர்தல் ஆணையம் இன்று முடிவு எடுக்கிறது.

புதுடெல்லி,

மராட்டியத்தில் தேர்தல் பிரசாரத்தின் போது பேசிய பிரதமர் மோடி, முதன் முறை வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை, பாகிஸ்தானின் பாலக்கோட்டில் தாக்குதல் நடத்திய வீரர்களுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்று பேசினார். மோடியின் இந்த பேச்சு தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது என கூறி  தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. 

இதேபோல், மேற்கு வங்கத்தில் தேர்தல் கூட்டத்தில் பேசிய பாரதிய ஜனதா தேசியத் தலைவர் அமித் ஷா, இந்திய பாதுகாப்புப் படை வீரர்களை மோடியின் படை என்று குறிப்பிட்டார். அமித்ஷாவின் இந்த பேச்சுக்கு எதிராகவும் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. 

ரபேல் விவகாரத்தில் பிரதமர் மோடியை திருடன் என்று ராகுல் காந்தி பேசியதற்கு எதிராகவும் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது.  இந்த மூன்று பேர் மீதான புகார்கள் குறித்தும் தேர்தல் ஆணையம் இன்று மாலை முடிவை அறிவிக்கும் என்று துணை தேர்தல் ஆணையர் சந்திர பூஷண் குமார் டெல்லியில் நேற்று தெரிவித்தார். 

மோடி, அமித்ஷாவின் தேர்தல் விதிமீறல்கள் மீதான புகார் மீது தேர்தல் ஆணையம் உடனடியாஅ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி காங்கிரஸ் எம்.பி. சுஷ்மிதா தேவ், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.  இந்த வழக்கை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது கவனிக்கத்தக்கது. 


Next Story