விமானங்கள் பறக்க பாகிஸ்தான் தடை விதித்ததால், ஏர்இந்தியாவிற்கு ரூ.300 கோடி இழப்பு


விமானங்கள் பறக்க பாகிஸ்தான் தடை விதித்ததால், ஏர்இந்தியாவிற்கு ரூ.300 கோடி இழப்பு
x
தினத்தந்தி 30 April 2019 10:04 AM GMT (Updated: 30 April 2019 10:36 AM GMT)

பாகிஸ்தான் தன்னுடைய வான்வெளியில் விமானங்கள் பறக்க தடை விதித்த பின்னர் ஏர் இந்தியாவிற்கு ரூ.300 கோடி இழப்பு நேரிட்டுள்ளது.

பிப்ரவரி இறுதியில் இந்திய விமானப்படை விமானங்கள் பாகிஸ்தானுக்குள் சென்று பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தின. இதனையடுத்து இருநாடுகள் இடையே பதற்றம் நேரிட்டதால் பாகிஸ்தான் தன்னுடைய வான்பகுதியில் விமானங்கள் பறக்க தடை விதித்தது. இதனால் புதுடெல்லியிலிருந்து செல்லும் விமானங்கள் நீண்டநேர பயணத்தை எதிர்கொள்ள வேண்டியது உள்ளது. ஏர்இந்தியாவிற்கு எரிபொருள்,  பணியாளர்கள் மற்றும் விமான சேவை எண்ணிக்கை குறைப்பு ஆகியவற்றால் நாளொன்றுக்கு ரூ. 6 கோடி இழப்பு நேரிடுகிறது.

புதுடெல்லியில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கும், வளைகுடா நாடுகளுக்கும், அமெரிக்காவிற்கும் செல்லும் ஏர் இந்தியா விமானங்கள் நீண்டநேர பயணைத்தை மேற்கொள்ள வேண்டியுள்ளது. விமானங்களின் பயணத்தை கண்காணிக்கும் OPSGROUP, பாகிஸ்தான் விதித்துள்ள கட்டுப்பாட்டில் மாற்றம் தென்படும் வாய்ப்பு இல்லை. பாகிஸ்தான் கட்டுப்பாட்டால் சுமார் 350  விமானங்களின் சேவை தாமதமாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விவகாரம் தொடர்பாக மத்திய விமான போக்குவரத்து அமைச்சகத்தை நாடியுள்ள ஏர் இந்தியா நிறுவனம், இழப்பினை ஈடுகட்ட நிதி வழங்குமாறு கேட்டுகொண்டுள்ளது, பல்வேறு பொறுப்புகள் காரணமாக இந்திய விமானங்களின் சேவையை நிறுத்த முடியாது எனவும் கேட்டுக்கொண்டுள்ளது. ஏர்இந்தியா தொடர்பு கொண்டதை ஒப்புக்கொண்ட விமான போக்குவரத்து அமைச்சகம், ஏர் இந்தியாவின் கோரிக்கை பரிசீலனை செய்யப்படும் என தெரிவித்துள்ளது.

Next Story