கற்பழிப்பு வழக்கில் சாமியார் ஆசாராம் மகனுக்கு ஆயுள் தண்டனை


கற்பழிப்பு வழக்கில் சாமியார் ஆசாராம் மகனுக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 30 April 2019 5:05 PM GMT (Updated: 30 April 2019 5:05 PM GMT)

பெண் சீடர் கற்பழிப்பு வழக்கில் சாமியார் ஆசாராம் பாபுவின் மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. #AsaramBapuSon #lifeimprisonment

சூரத்,

சாமியார் ஆசாராம் பாபு மற்றும் அவரது மகன் நாராயண் சாய் உள்பட 11 பேர் மீது குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த 2 சகோதரிகள் கடந்த 2013ம் ஆண்டு கற்பழிப்பு, பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட புகார்களை தெரிவித்தனர்.

இதில் ஆசாராம் மீதான வழக்கு காந்திநகர் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. நாராயண் சாய் தொடர்ந்து தன்னை கற்பழித்ததாகவும், அதற்கு மற்றவர்கள் உடந்தையாக இருந்ததாகவும் இளைய சகோதரி புகாரில் கூறியிருந்தார்.

இந்த வழக்கின் விசாரணை சூரத் மாவட்ட கோர்ட்டில் நடைபெற்று வந்தது. நீதிபதி பிரதாப் காத்வி கடந்த 26-ந் தேதி நாராயண் சாய் உள்பட 5 பேர் குற்றவாளிகள் என அறிவித்தார். மற்ற 6 பேரை விடுதலை செய்தார். குற்றவாளிகளுக்கான தண்டனை இன்று அறிவிக்கப்பட்டது. இதில் நாராயண் சாய்க்கு ஆயுள் தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. கங்கா, ஜமுனா, ஹனுமன் ஆகியோருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதமும், சாயின் கார் டிரைவர் மல்ஹோத்ராவுக்கு 6 மாதம் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

சாமியார் ஆசாராம் பாபு ஏற்கனவே வெவ்வேறு கற்பழிப்பு வழக்குகளில் ஆயுள் தண்டனை பெற்று, சிறையில் அடைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story