தேர்தல் பிரசாரத்தின் போது மத்திய மந்திரி நிதின் கட்காரிக்கு திடீர் உடல் நலக்குறைவு


தேர்தல் பிரசாரத்தின் போது மத்திய மந்திரி நிதின் கட்காரிக்கு திடீர் உடல் நலக்குறைவு
x
தினத்தந்தி 1 May 2019 6:30 PM GMT (Updated: 1 May 2019 6:17 PM GMT)

தேர்தல் பிரசாரத்தின் போது மத்திய மந்திரி நிதின் கட்காரிக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

சிம்லா,

இமாசலபிரதேச மாநிலத்தில் பழங்குடியினர் நிறைந்த கின்னனூர் மாவட்டத்தில் பாரதீய ஜனதா வேட்பாளருக்கு ஆதரவாக மத்திய தரை வழிபோக்குவரத்து மந்திரி நிதின் கட்காரி நேற்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். 61 வயதான அவருக்கு தேர்தல் பிரசாரத்தின்போது திடீரென ரத்த அழுத்தம் அதிகரித்து உடல் நலம் பாதிக்கப்பட்டது. அவர் உடனடியாக சிம்லா மாவட்டத்தில் சார்பரா என்ற இடத்தில் உள்ள ஹாலில் தங்க வைக்கப்பட்டார்.

இதுபற்றி இந்திரா காந்தி மருத்துவக்கல்லூரி அரசு ஆஸ்பத்திரி டாக்டர்களுக்கு தகவல்கொடுக்கப்பட்டது. அங்கு இருந்து மருத்துவக்குழுவினர் விரைந்து வந்து நிதின் கட்காரிக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டனர். அதன் பின்னர் அவரது உடல் நிலை சீராக இருப்பதாக டாக்டர்கள் அறிவித்தனர்.

Next Story