ஏப்ரல் மாதத்தில் மட்டும் ரூபாய் 1,13,865 கோடி ஜிஎஸ்டி வரி வசூல்!


ஏப்ரல் மாதத்தில் மட்டும் ரூபாய் 1,13,865 கோடி ஜிஎஸ்டி வரி வசூல்!
x
தினத்தந்தி 2 May 2019 1:03 PM IST (Updated: 2 May 2019 1:03 PM IST)
t-max-icont-min-icon

ஏப்ரல் மாதத்தில் மட்டும் ரூபாய் 1,13,865 கோடி ஜிஎஸ்டி வரி வசூல் செய்யப்பட்டு உள்ளதாக மத்திய நிதித்துறை அமைச்சர் தெரிவித்து உள்ளார். #GST #OneNationOneTax

புதுடெல்லி

ஏப்ரல் மாதத்தில் வசூலான ஜிஎஸ்டி வரி வசூல் குறித்த விவரங்களை மத்திய நிதித்துறை அமைச்சர் வெளியிட்டார். இதில் கடந்த மார்ச் மாத ஜிஎஸ்டி வரியை (மார்ச் - ரூபாய் 1,06,577 கோடி ) காட்டிலும் 6.84%  உயர்ந்து ஏப்ரல் மாத ஜிஎஸ்டி வரி வசூல் சுமார் ரூபாய் 1,13,865 கோடி வசூல் ஆனது என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். இந்த ஜிஎஸ்டி வரி வசூல் தொகையானது கடந்த மாதங்களை காட்டிலும் மிக அதிகம் என தெரிய வந்துள்ளது.

ஏப்ரல் மாதத்தில் மத்திய அரசுக்கு ரூபாய் 47,533 கோடி வருவாய் கிடைத்துள்ளது. அதே போல் மாநில அரசுகளுக்கு ரூபாய் 50,776 கோடி ஜிஎஸ்டி வரி மூலம் வருவாய் கிடைத்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. 2018-2109 நிதி ஆண்டில் சராசரி மாத ஜிஎஸ்டி வரி வசூல் ரூபாய் 98,114 கோடியாக இருந்த நிலையில் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாத ஜிஎஸ்டி வரி வசூல் சுமார் 16.05% அதிகரித்துள்ளது.

ஜிஎஸ்டி வசூல் ஏப்ரல் மாதத்தில் ஒரு லட்சத்து 13 ஆயிரம் கோடி ரூபாயை தொட்டுள்ளது. ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பின்னர் முதல் முறையாக மிக அதிகபட்ச வரி வசூல் எட்டப்பட்டுள்ளது. இதுவரை ஒட்டுமொத்தமாக 5 முறை மட்டுமே 1 லட்சம் கோடி ரூபாய் வரி வசூல் எட்டப்பட்டுள்ளது. 

ஏப்ரல் மாத ஜிஎஸ்டி வசூல் 1 லட்சத்து 13 ஆயிரம் கோடி ரூபாயில், மத்திய அரசின் பங்காக 21 ஆயிரத்து 600 கோடி ரூபாயும், மாநில அரசின் பங்காக 28 ஆயிரத்து 800 கோடி ரூபாயும் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story