பா.ஜனதா தலைவர் கொல்லப்பட்ட தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டிய மாவோயிஸ்டு சுட்டுக் கொலை
பா.ஜனதா தலைவர் கொல்லப்பட்ட தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டிய மாவோயிஸ்டு தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் தந்தேவாடாவில் கடந்த 9-ம் தேதி மாவோயிஸ்டுகள் நடத்திய கண்ணி வெடிகுண்டு தாக்குதலில் பா.ஜனதா எம்.எல்.ஏ. சிக்கினார். கவ்குண்டா, ஷியாம்கிரி இடையே வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுக்கி வைத்திருந்த கண்ணி வெடிகுண்டு வெடித்ததில் பாரதீய ஜனதா எம்எல்ஏ பீமா மாண்டவி, பாதுகாவலர்கள் சென்று கொண்டிருந்த வாகனம் சிக்கியது. பா.ஜனதா எம்.எல்.ஏ. பீமா மாண்டவி மற்றும் 5 போலீசார் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதிகளில் ஒருவரான மாவோயிஸ்டு கமாண்டர் மாதவி முயியா அங்கு நடந்த என்கவுண்டரில் கொல்லப்பட்டார் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாதவி முயியாவின் தலைக்கு பாதுகாப்பு படை ரூ. 8 லட்சம் விலை நிர்ணயம் செய்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story