தாய்க்கு ஆதரவாக நடிகை சோனாக்சி சின்கா தேர்தல் பிரசாரம்

காங்கிரஸ் கட்சி சார்பில் பாட்னா சாகிப் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுபவர் நடிகை சத்ருகன் சின்கா. இவருடைய மனைவி பூனம் சின்கா.
லக்னோ,
லக்னோ நாடாளுமன்ற தொகுதியில் சமாஜ்வாடி கட்சி சார்பில் பூனம் சின்கா போட்டியிடுகிறார். இந்த தொகுதிக்கு வருகிற 6–ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இவர்களுடைய மகளும் பிரபல நடிகையுமான சோனாக்சி சின்கா, தனது தாய் பூனம் சின்காவுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். இவர், இன்று (வெள்ளிக்கிழமை) லக்னோவில் இருந்து நடைபெறும் தேர்தல் பிரசார பேரணியில் கலந்துகொண்டு தனது தாய்க்கு வாக்கு சேகரிக்கிறார்.
பூனம் சின்கா மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்கை எதிர்த்து போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story






