புயல் கரையை கடப்பதால் ஆந்திராவில் 2 துறைமுகங்களில் 10-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்


புயல் கரையை கடப்பதால் ஆந்திராவில் 2 துறைமுகங்களில் 10-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
x
தினத்தந்தி 3 May 2019 4:03 AM GMT (Updated: 3 May 2019 4:03 AM GMT)

புயல் கரையை கடப்பதால் ஆந்திராவில் 2 துறைமுகங்களில் 10-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

விசாகப்பட்டினம்,

தென்கிழக்கு வங்கக் கடலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக மாறியது. பின்னர் அது அதிதீவிர புயலாக உருவெடுத்தது. பானி என பெயரிடப்பட்ட அந்த புயல் தமிழகத்தின் வடகடலோர பகுதியில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது மிக தீவிர புயலாக மாறி வட கிழக்கு திசை நோக்கி நகர்ந்து, ஒடிசாவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்த புயலானது, இன்று காலை 8 மணி அளவில் ஒடிசாவில் கரையைக் கடக்கத் துவங்கியது. 

புயல் கரையை கடந்து வருவதால், மணிக்கு 174 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசிவருகிறது. கனமழையும் பெய்து வருகிறது. புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரயில்கள், விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. புயல் பாதிப்புக்கு உள்ளாக கூடிய இடங்களில் வசிக்கும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தற்காலிக தங்கு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

புயல் கரையை கடைப்பதால் ஆந்திராவில் 2 துறைமுகங்களில் 10- அம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.  கலிங்கப்பட்டினம், பீமுனிபட்டினம் துறைமுகங்களில் 10-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும், விசாகப்பட்டினம், கங்காவரம் துறைமுகங்களில் 8-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும் ஏற்றப்பட்டுள்ளது. 


Next Story