இமாச்சல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்


இமாச்சல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்
x
தினத்தந்தி 3 May 2019 3:59 PM IST (Updated: 3 May 2019 3:59 PM IST)
t-max-icont-min-icon

இமாச்சல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இமாச்சல் பிரதேசம் மாண்டி மாவட்டத்தில் இன்று லேசான நிலஅதிர்வு உணரப்பட்டது. திடீர் அதிர்வால் அச்சமடைந்த சிலர், உடனடியாக வீட்டை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்தனர்.

இந்த நில அதிர்வு ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து எந்த நில அதிர்வும் உணரப்படவில்லை என்றாலும், பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவியது. வீடுகள், கட்டிடங்கள் அதிர்ந்தாலும், அசம்பாவிதம் எதுவும் நிகழவில்லை.

Next Story