எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்தை குற்றம் சாட்டுவது கேலிக்குரியது - மத்திய அமைச்சர்


எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்தை குற்றம் சாட்டுவது கேலிக்குரியது -  மத்திய அமைச்சர்
x
தினத்தந்தி 3 May 2019 9:02 PM IST (Updated: 3 May 2019 9:02 PM IST)
t-max-icont-min-icon

எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்தை குற்றம் சாட்டுவது கேலிக்குரியது என மத்திய அமைச்சர் ஜிதேந்திரசிங் பேசியுள்ளார்.

வயநாடு தொகுதியில் சிறுபான்மை சமூகத்தினர் அதிகம் இருப்பதால் ராகுல் காந்தி அங்கு போட்டியிடுகிறார் என்று பிரதமர் மோடி பேசியதற்கு எதிராக  காங்கிரஸ் தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்தது. ஆனால் தேர்தல் கமி‌ஷன் பிரதமரின் பேச்சில் விதிமீறல் இல்லை என்றது. இந்நிலையில் பிரதமர் மோடியின் தேர்தல் பிரசார பேச்சில் விதிமீறல் இல்லை என தெரிவித்த தேர்தல் ஆணையத்தை எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவது கேலிக்குரியது என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திரசிங்  கூறியுள்ளார்.  

பிரதமர் மோடியின் பேச்சில் விதிமீறல் இல்லை என்று தேர்தல் ஆணையம் அறிவித்ததில் பா.ஜனதா தனது அதிகாரத்தை பயன்படுத்தியதாக எதிர்க்கட்சிகள் கூறுவதில் எந்த உண்மையும் இல்லை. காங்கிரஸ் போன்ற எதிர்க்கட்சிகளின் இந்த புகார்களுக்கு எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை எனவும் குறிப்பிட்டார்.

Next Story