நாடாளுமன்ற தேர்தலில் ஒப்புகை சீட்டுகளை எண்ணும் விவகாரம்: எதிர்க்கட்சிகளின் மறுஆய்வு மனு மீது அடுத்த வாரம் விசாரணை - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
நாடாளுமன்ற தேர்தலில் ஒப்புகை சீட்டுகளை எண்ணும் விவகாரம் தொடர்பாக, எதிர்க்கட்சிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மறுஆய்வு மனு அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
புதுடெல்லி,
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து காங்கிரஸ், தெலுங்குதேசம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி உள்ளன. இதனால் எதிர்க்கட்சிகளின் சந்தேகத்தை போக்கும் வகையில், இந்த தேர்தலில் ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதியிலும் ஒரு சட்டசபை தொகுதியில் ஒரு வாக்குச்சாவடி வீதம் ‘விவிபாட்’ கருவியில் பதிவாகும் ஒப்புகை சீட்டுகளை எண்ணி வாக்குகளுடன் ஒப்பிட்டு சரிபார்ப்பது என்று தேர்தல் கமிஷன் முடிவு செய்தது.
ஆனால் தேர்தல் கமிஷனின் இந்த முடிவு திருப்தி அளிக்காததால், ஒவ்வொரு தொகுதியிலும் குறைந்தபட்சம் 50 சதவீத ஒப்புகை சீட்டுகளையாவது எண்ண உத்தரவிடவேண்டும் என்று கோரி காங்கிரஸ், தெலுங்கு தேசம், தி.மு.க. உள்ளிட்ட 21 எதிர்க்கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன.
இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, ஒரு சட்டசபை தொகுதிக்கு 5 வாக்குச்சாவடிகளில், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகளுடன், ‘விவிபாட்’ கருவியில் உள்ள ஒப்புகை சீட்டுகளையும் எண்ணி ஒப்பிட்டு சரிபார்க்க வேண்டும் என்று கடந்த மாதம் 8-ந்தேதி தீர்ப்பு வழங்கியது.
ஆனால் இந்த தீர்ப்பு எதிர்கட்சிகளுக்கு திருப்தி அளிக்கவில்லை.
இதனால் இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி 21 எதிர்க்கட்சிகளின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
அந்த மனுவில், சுப்ரீம் கோர்ட்டு அனுமதித்துள்ள வெறும் 2 சதவீத உயர்வு மிகவும் குறைவானது என்றும், இது தீர்ப்புக்கு முன்பு இருந்த நிலையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்றும், எனவே இந்த தீர்ப்பை அர்த்தமுள்ளதாக ஆக்கும் வகையில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் ஒப்புகை சீட்டுகளை ஒவ்வொரு தொகுதியிலும் 50 சதவீதமாவது எண்ணுமாறு உத்தரவிட வேண்டும் என்றும் கூறப்பட்டு உள்ளது.
எதிர்க்கட்சிகள் சார்பில் மூத்த வக்கீல் அபிஷேக் மனு சிங்வி நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு ஆஜராகி, இந்த மறுஆய்வு மனுவை அவசர வழக்காக கருதி அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் மறுஆய்வு மனு மீது அடுத்த வாரம் விசாரணை நடைபெறும் என்று உத்தரவிட்டனர்.

Related Tags :
Next Story