திரைமறைவில் செயல்படுவதை விட ‘பா.ஜனதாவுடன் ஆர்.எஸ்.எஸ். இணைந்து விடலாம்’ - அசோக் கெலாட் கருத்து


திரைமறைவில் செயல்படுவதை விட ‘பா.ஜனதாவுடன் ஆர்.எஸ்.எஸ். இணைந்து விடலாம்’ - அசோக் கெலாட் கருத்து
x
தினத்தந்தி 5 May 2019 2:38 AM IST (Updated: 5 May 2019 2:38 AM IST)
t-max-icont-min-icon

திரைமறைவில் செயல்படுவதை விட பா.ஜனதாவுடன் ஆர்.எஸ்.எஸ். இணைந்து விடலாம் என அசோக் கெலாட் கருத்து தெரிவித்துள்ளார்.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்டதற்கு பிறகு ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு அப்போதைய மத்திய உள்துறை மந்திரி சர்தார் வல்லபாய் படேல் தடை விதித்தார். அதன் பின்னர் அந்த அமைப்பு அரசியலில் ஈடுபட போவதில்லை என முடிவு செய்திருந்தது.

ஆனால் இப்போது பா.ஜனதாவுக்கு ஆதரவு அளித்து கொண்டு மறைமுக அரசியல் நடத்தி வருகிறது. இது நாட்டு நலனுக்கு உகந்தது அல்ல. திரைமறைவில் செயல்படுவதற்கு பதில் அந்த அமைப்பு பா.ஜனதாவுடன் இணைந்து நேரடி அரசியலில் ஈடுபடலாம்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இந்துத்துவா, கலாசார நிகழ்ச்சி என்ற பெயரில் மக்களை தவறாக வழிநடத்துகிறது. மக்கள் எப்போதும் ஒரு அரசியல் கட்சியின் கொள்கை, திட்டங்களை மதிப்பீட்டு அதன் பிறகு ஒரு முடிவுக்கு வருவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story