10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகாது - சிபிஎஸ்இ செய்தித் தொடர்பாளர் தகவல்


10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகாது - சிபிஎஸ்இ செய்தித் தொடர்பாளர் தகவல்
x
தினத்தந்தி 5 May 2019 12:48 PM IST (Updated: 5 May 2019 12:48 PM IST)
t-max-icont-min-icon

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகாது என்று சிபிஎஸ்இ செய்தித் தொடர்பாளர் ரமா சர்மா தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

நாடு முழுவதும் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் பிப்ரவரி 2-ம் தேதி முதல் மார்ச் 29-ம் தேதி வரை  சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை 27 லட்சம்  மாணவ-மாணவிகள் எழுதினர்.

இந்நிலையில் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என்று செய்தி காட்டுத்தீ போல் வேகமாக பரவியது. தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டிய மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளில் குவிந்தனர். சிலர்  தகவலுக்காக காத்திருந்தனர். 

இது குறித்து சிபிஎஸ்இ செய்தித் தொடர்பாளர் ரமா சர்மா கூறியதாவது:- 

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகாது. மேலும் சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என பரவும் செய்தி உண்மையல்ல. தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு 10-ம் வகுப்பு தேர்வை எழுதியவர்களில் 86.70 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தகக்து. 

Next Story