தமிழக மாணவர்கள் விவகாரம்; என் கருத்து வேண்டுமென்றே திரிக்கப்பட்டுள்ளது - பிரகாஷ்ராஜ் டுவீட்


தமிழக மாணவர்கள் விவகாரம்; என் கருத்து வேண்டுமென்றே திரிக்கப்பட்டுள்ளது - பிரகாஷ்ராஜ் டுவீட்
x
தினத்தந்தி 5 May 2019 1:55 PM IST (Updated: 5 May 2019 2:40 PM IST)
t-max-icont-min-icon

தமிழக மாணவர்கள் தொடர்பாக அத்தகைய கருத்தை நான் ஒருபோதும் தெரிவிக்கவில்லை என்று நடிகர் பிரகாஷ்ராஜ் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

சென்னை,

டெல்லி மாணவர் வாய்ப்புகளை தமிழக மாணவர்கள் பறிப்பு என பிரகாஷ்ராஜ் கூறியதாக தகவல் வெளியானதையடுத்து, நடிகர் பிரகாஷ்ராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- 

தமிழக மாணவர்களால் டெல்லி மாணவர்களின் வாய்ப்பு பறிபோவது உண்மைதான் என நான் கூறவில்லை. தமிழக மாணவர்கள் குறித்து நான் பேசியதாக வேண்டுமென்றே திரித்து வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக மாணவர்கள் தொடர்பாக அத்தகைய கருத்தை நான் ஒருபோதும் தெரிவிக்கவில்லை.  தரம் தாழ்ந்து, கருத்துக்களை திரித்து வெளியிட்டோரை நினைத்து வெட்கப்படுகிறேன். எனது கருத்து உள்நோக்கத்துடன் திரித்துக் கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story