மேற்கு வங்காள புயல் பாதிப்பு: மம்தா பானர்ஜியுடன் பிரதமர் மோடி ஏன் பேசவில்லை - மத்திய அரசு விளக்கம்


மேற்கு வங்காள புயல் பாதிப்பு: மம்தா பானர்ஜியுடன் பிரதமர் மோடி ஏன் பேசவில்லை - மத்திய அரசு விளக்கம்
x
தினத்தந்தி 5 May 2019 3:22 PM (Updated: 5 May 2019 3:22 PM)
t-max-icont-min-icon

மேற்கு வங்காள புயல் பாதிப்பு தொடர்பாக மம்தா பானர்ஜியுடன் பிரதமர் மோடி பேசாதது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. #MamataBanerjee #PMModi

புதுடெல்லி,

பானி புயலால் மேற்கு வங்காளத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து, பிரதமர் மோடி அந்த மாநில கவர்னரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது தேவையான உதவிகளை செய்ய மத்திய அரசு தயாராக இருப்பதாகவும் கூறினார். இதை அவர் டுவிட்டர் பதிவில் தெரிவித்து இருந்தார்.

புயல் பாதித்த ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக்கை தொடர்பு கொண்ட பிரதமர் மோடி, மேற்கு வங்க மாநில பாதிப்பு குறித்து கவர்னர் கேசரிநாத் திரிபாதியிடம் கேட்டறிந்தார். இதுகுறித்து கருத்து தெரிவித்த ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், முதல்-மந்திரி மம்தா பானர்ஜியை மதிக்காமல் கவர்னரிடம் பிரதமர் பேசி இருப்பது கூட்டாட்சி முறைக்கு எதிரானது என்று கூறியது.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து மத்திய அரசு அளித்துள்ள விளக்கத்தில், “ புயல் பாதிப்புகள் குறித்து பிரதமர் மோடி இரு முறை தொலைபேசி மூலம் மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜியை தொடர்பு கொண்டு பேச முயன்றார். ஆனால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. ஒரு முறை பேச முயன்ற போது முதல்-மந்திரி சுற்றுப்பயணத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. எனவே பிரதமர் மோடி அந்த மாநில கவர்னர் கேசரிநாத் திரிபாதியை தொடர்பு கொண்டு பேசினார்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  


Next Story