சவுதி அரேபியா சிறையில் இருந்து 850 இந்தியர்கள் விடுதலை - பிரதமர் மோடி தகவல்


சவுதி அரேபியா சிறையில் இருந்து 850 இந்தியர்கள் விடுதலை - பிரதமர் மோடி தகவல்
x
தினத்தந்தி 5 May 2019 5:07 PM GMT (Updated: 5 May 2019 5:07 PM GMT)

தனது கோரிக்கையை ஏற்று சவுதி அரேபியா சிறையில் இருந்து 850 இந்தியர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். #PMModi

பதோகி,

உத்தரபிரதேச மாநிலம் பதோகியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பங்கேற்றார். அப்போது அவர், “சவுதி அரேபிய இளவரசர் இந்தியா வந்திருந்தபோது சவுதி அரேபிய சிறைகளில் சாதாரண குற்றங்களுக்காக தண்டனை அனுபவித்து வருபவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன். என்னுடைய வேண்டுகோளை ஏற்று சவுதி அரேபிய அரசு 850 பேரை விடுதலை செய்வதாக ஒப்புக்கொண்டது. ரம்ஜானை கொண்டாட அவர்கள் விரைவில் இந்தியா திரும்புவார்கள்.

ஜெய்ஷ் இ முகமது தலைவர் மசூத் அசார் சர்வதேச பயங்கரவாதி என ஐ.நா. அறிவித்து உள்ளதை தேர்தலையொட்டி பா.ஜ.க. எடுத்த நடவடிக்கையாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. அவர்கள் அரசின் எல்லா நடவடிக்கைகளையும் தேர்தல் கண்ணோட்டத்திலேயே பூதக்கண்ணாடி வைத்து பார்க்கின்றனர்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மக்களுக்கு சேவை ஆற்றுவோம். ஏழைகள் பயன்பெறும் வகையில் ஆயுஷ்மான் பாரத் திட்டம் உள்ளிட்டவற்றை தொடங்குவோம். எதிர்க்கட்சிகள் மக்களை மதம் மற்றும் சாதிரீதியாக பிரிக்கின்றன. ஆனால் நாங்கள் வளர்ச்சியே தாரக மந்திரமாக செயல்படுகிறோம்” என்று கூறினார். 

Next Story