அமிதாப் பச்சனுக்கு திடீர் உடல் நலக்குறைவு


அமிதாப் பச்சனுக்கு திடீர் உடல் நலக்குறைவு
x
தினத்தந்தி 6 May 2019 12:00 AM IST (Updated: 5 May 2019 10:44 PM IST)
t-max-icont-min-icon

நடிகர் அமிதாப் பச்சனுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

மும்பை,

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் கடந்த 36 ஆண்டுகளாக தன் ரசிகர்களையும், நல விரும்பிகளையும் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமைகளில் சந்தித்து வருகிறார். 76 வயதான அவருக்கு நேற்று திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவருடைய நேற்றைய ரசிகர்கள் சந்திப்பு ரத்து செய்யப்பட்டது.

இது குறித்து அமிதாப் பச்சன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், ‘‘உடல் நலம் பாதிப்பால் படுக்கையில் இருக்கிறேன். கவலைப்படுவதற்கு ஒன்றும் இல்லை. இருந்தாலும் என்னால் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத நிலையில் உள்ளேன். இதை அனைவரிடமும் தெரிவியுங்கள்’’ என்று குறிப்பிட்டு உள்ளார்.


Next Story