ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை கைது செய்ய டெல்லி ஐகோர்ட் தடை
ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை கைது செய்ய டெல்லி ஐகோர்ட் தடை விதித்து உள்ளது.
புதுடெல்லி
ஏர்செல் மேக்சிஸ் நிறுவனம் தொடர்பான முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது சி.பி.ஐ., அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் தங்களை கைது செய்யக்கூடாது என ப.சிதம்பரம் சார்பில் டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் முன்ஜாமீன் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய ஏப்ரல் 26-ந் தேதி வரை தடை நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் ஏப்ரல் 26 ந்தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கப்பிரிவு தரப்பில், வழக்கு தொடர்பாக சிங்கப்பூரில் இருந்து கிடைக்க வேண்டிய தகவல் இன்னும் வராததால் விசாரணையை 4 வாரத்துக்கு நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி வழக்கை மே 6-ந் தேதிக்கு ஒத்திவைத்தார். அதுவரை ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தை கைது செய்வதற்கான தடையை நீட்டிப்பதாகவும் அவர் உத்தரவிட்டார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது ப.சிதம்பரம் மற்றும் கார்த்திக் சிதம்பரத்தை மே 30-ம் தேதி வரை கைது செய்ய தடை விதித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
Related Tags :
Next Story