சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் தள்ளுபடி


சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் தள்ளுபடி
x
தினத்தந்தி 6 May 2019 12:46 PM GMT (Updated: 6 May 2019 8:34 PM GMT)

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது முன்னாள் பெண் ஊழியர் ஒருவர் பாலியல் தொந்தரவு புகார் கொடுத்தார். தன் மீதான புகார் தொடர்பாக விசாரணை நடத்த தனக்கு அடுத்த இடத்தில் உள்ள மூத்த நீதிபதியான எஸ்.ஏ.பாப்டேவை, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நியமித்தார்.

அவரது தலைமையிலான 3 பேர் கொண்ட விசாரணை குழுவில் நீதிபதி ரமணா மற்றும் பெண் நீதிபதி இந்திரா பானர்ஜி ஆகியோருடம் இடம் பெற்றனர்.

இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு எதிரான பாலியல் புகாரில் முகாந்திரம் இல்லை என கூறி, நீதிபதி பாப்டே தலைமையிலான சிறப்பு விசாரணை குழு புகார் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.  விசாரணை குழுவின் அறிக்கை பற்றிய விவரங்களை வெளியிட அதிகாரமில்லை என சுப்ரீம் கோர்ட்டின் பொது செயலாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு தெரிவிக்கின்றது.

Next Story