தேசிய செய்திகள்

காங்கிரஸ் மீது குற்றம்சாட்டி ஸ்மிருதி இரானி அளித்த வீடியோ ஆதாரம் பொய் -தேர்தல் ஆணையம் + "||" + EC Rubbishes Smriti Irani's Charges of Booth Capturing by Congress in Amethi

காங்கிரஸ் மீது குற்றம்சாட்டி ஸ்மிருதி இரானி அளித்த வீடியோ ஆதாரம் பொய் -தேர்தல் ஆணையம்

காங்கிரஸ் மீது குற்றம்சாட்டி ஸ்மிருதி இரானி அளித்த வீடியோ ஆதாரம் பொய் -தேர்தல் ஆணையம்
அமேதி தொகுதியில் வாக்குச்சாவடியை கைப்பற்றியதாக காங்கிரஸ் மீது குற்றம்சாட்டி ஸ்மிருதி இரானி அளித்த வீடியோ ஆதாரம், மார்பிங் செய்து தயாரிக்கப்பட்டது என தேர்தல் ஆணையம் கூறிவிட்டது.
அமேதி,

உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் வாக்குச்சாவடிக்குள் 75 வயதுடைய பெண் வாக்காளரிடம் அங்கிருந்த தலைமை அதிகாரி ஒருவர், காங்கிரஸ் சின்னம் இருக்கும் இடத்தில் விரலை வைத்து வாக்குப்பதிவு செய்ய வேண்டும் என கூறியதாக சுட்டிக்காட்டி தேர்தல் ஆணையத்தை உஷார் படுத்த  ஸ்மிருதி இரானி டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டார். இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் உடனடியாக  நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன் என கூறி இருந்தார். காங்கிரஸ் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றுவதை ராகுல் காந்தி ஆதரிக்கிறார் என்று குற்றம் சாட்டி இருந்தார். மேலும் இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்திருப்பதாகவும் அவர் கூறினார்.

இதை விசாரித்த, தேர்தல் அதிகாரி வெங்கடேஸ்வர் லு (Venkateshwar Lu) புகாரில் உண்மையில்லை என்று கூறியுள்ளார்.

அந்த வாக்குச்சாவடியில் முகவர்கள் தொடங்கி அனைத்து அலுவலர்களிடமும் இதுதொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டதாகவும், விசாரணையின்போது வாக்குச்சாவடி பொறுப்பு அதிகாரி வெளியில் அனுப்பப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.