மகாராஷ்டிராவில் 39 வருடங்களில் நக்சல் தாக்குதலில் 224 வீரர்கள், பொதுமக்களில் 571 பேர் சுட்டு கொலை


மகாராஷ்டிராவில் 39 வருடங்களில் நக்சல் தாக்குதலில் 224 வீரர்கள், பொதுமக்களில் 571 பேர் சுட்டு கொலை
x
தினத்தந்தி 7 May 2019 4:10 PM GMT (Updated: 7 May 2019 4:10 PM GMT)

மகாராஷ்டிராவில் கடந்த 1980ம் ஆண்டில் இருந்து 224 பாதுகாப்பு படையினர் மற்றும் பொதுமக்களில் 571 பேர் நக்சலைட்டுகளால் கொல்லப்பட்டு உள்ளனர்.

மகாராஷ்டிராவில் கட்சிரோலி, சந்திராபூர் மற்றும் கோண்டியா ஆகிய பகுதிகள் நக்சலைட்டுகள் பாதித்த மாவட்டங்கள் என உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில், மகாராஷ்டிராவின் மூத்த அரசு அதிகாரி ஒருவர் கூறும்பொழுது, கடந்த 1980ம் ஆண்டில் இருந்து இதுவரை 224 பாதுகாப்பு படையினர் மற்றும் பொதுமக்களில் 571 பேர் நக்சலைட்டுகளால் கொல்லப்பட்டு உள்ளனர்.

எனினும் கடந்த 2018ம் ஆண்டு போலீசாருக்கு சிறப்பு ஆண்டாக அமைந்தது.  அவர்கள் ஒருவரை கூட இழக்கவில்லை.  அதேவேளையில் 50 நக்சலைட்டுகள் போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டனர்.  இதுவரை 246 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டு உள்ளனர்.  அவர்களில் 98 பேர் 2014ம் ஆண்டுக்கு பின் பலியானவர்கள்.  இதேபோன்று கடந்த 2014ம் ஆண்டுக்கு பின்னர் 19 போலீசார் மரணம் அடைந்துள்ளனர்.

சமீபத்தில் கடந்த மே 1ந்தேதி ஜம்புர்கேடா பகுதியில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்ததில் 15 போலீசார் மற்றும் ஓட்டுனர் ஒருவர் கொல்லப்பட்டனர்.

Next Story