துரியோதனன் யார்? அர்ஜுனன் யார்? என்பது 23-ந் தேதி தெரியும் - பிரியங்காவுக்கு அமித்ஷா பதில்
துரியோதனன் யார், அர்ஜுனன் யார் என்பது 23-ந் தேதி தெரியும் என்று பிரியங்காவுக்கு அமித்ஷா பதிலடி கொடுத்தார்.
திஷ்னுபூர்,
காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா பிரதமர் நரேந்திர மோடியை துரியோதனனுடன் ஒப்பிட்டு பேசியதற்கு பா.ஜனதா தலைவர் அமித்ஷா பதிலடி கொடுத்துள்ளார். மேற்கு வங்காள மாநிலம் திஷ்னுபூரில் பிரசாரத்தில் ஈடுபட்ட அமித்ஷா இதுபற்றி கூறியதாவது:-
பிரியங்கா வத்ரா பிரதமர் மோடியை துரியோதனன் என்று கூறியுள்ளார். பிரியங்கா, இது ஜனநாயகம். நீங்கள் சொல்லிவிட்டதாலேயே யாரும் துரியோதனன் ஆகிவிட முடியாது. மே 23-ந் தேதி யார் துரியோதனன், யார் அர்ஜுனன் என்பது நமக்கு தெரிந்துவிடும். ராஜீவ் காந்தி ஆட்சியில் நடைபெற்ற போபர்ஸ் வழக்கு பற்றி பிரதமர் மோடி பேசினார். அவர் கூறியதில் என்ன தவறு இருக்கிறது? இவ்வாறு அமித்ஷா கூறினார்

Related Tags :
Next Story