“தென் இந்தியாவை மாற்றான்தாய் மனப்பாங்குடன் நடத்துகிறது”- மத்திய அரசு மீது சசி தரூர் தாக்கு


“தென் இந்தியாவை மாற்றான்தாய் மனப்பாங்குடன் நடத்துகிறது”- மத்திய அரசு மீது சசி தரூர் தாக்கு
x
தினத்தந்தி 7 May 2019 10:11 PM (Updated: 7 May 2019 10:11 PM)
t-max-icont-min-icon

தென் இந்தியாவை மாற்றான்தாய் மனப்பாங்குடன் நடத்துவதாக மத்திய அரசை, சசி தரூர் விமர்சித்துள்ளார்.

புதுடெல்லி,

முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான சசி தரூர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாரதீய ஜனதா கூட்டணி அரசை கடுமையாக விமர்சித்தார். இதையொட்டி அவர் கூறும்போது, “தற்போதைய மத்திய அரசு, தென் இந்தியாவை மாற்றான்தாய் மனப்பாங்குடன் நடத்துகிறது. நாட்டின் அரசியல் தலைவிதியை நிர்ணயிப்பதில் தென் இந்தியா முக்கிய பங்காற்றும். குறிப்பாக தற்போதைய மத்திய அரசை வெளியேற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கும்” என கூறினார்.

மேலும், “ நாடு சுதந்திரம் அடைந்தது முதல் கடைப்பிடித்து வந்த கூட்டாட்சி உணர்வு, கடந்த 5 ஆண்டு கால பாரதீய ஜனதா கட்சி ஆட்சியில் பரந்த அளவில் பாதிப்புக்கு ஆளாகி உள்ளது. குறிப்பாக கலாசாரத்தில் கை வைத்திருக்கிறது. மாட்டிறைச்சி மீதான தடை, இந்தி திணிப்பு போன்றவற்றை சொல்லலாம்” எனவும் கூறினார்.

இந்த நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி கடந்த தேர்தலைப்போல 282 இடங்களைப் பெற முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.


Next Story