தேசிய செய்திகள்

காதலியுடன் ஊர் சுற்ற பைக் வாங்க பேக்கரியில் கொள்ளையடித்த இளைஞர் + "||" + Spit around with the girlfriend Buy the bike The young man who plundered the bakery

காதலியுடன் ஊர் சுற்ற பைக் வாங்க பேக்கரியில் கொள்ளையடித்த இளைஞர்

காதலியுடன் ஊர் சுற்ற பைக்  வாங்க பேக்கரியில் கொள்ளையடித்த இளைஞர்
புதுச்சேரியில் காதலியை மகிழ்விக்க பேக்கரியில் ரூ.6 லட்சத்தை கொள்ளையடித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதுச்சேரி,

புதுச்சேரி அடுத்த மூலக்குளம் பகுதியை சேர்ந்தவர் பெருமாள். இவர் குண்டுசாலை பகுதியில் கடந்த 5 வருடங்களாக அமுதா என்ற பெயரில் பேக்கரி கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் சனிக்கிழமை தனது உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கடையை பூட்டிவிட்டு சென்றவர், நேற்று இரவு கடையை திறந்துள்ளார் .

அப்போது பேக்கரியின் மேல்கூரை பிரிக்கப்பட்டு, கல்லாப்பெட்டியில் இருந்த பணமும் கொள்ளை அடிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக ரெட்டியார்பாளையம் போலீசார் நடத்திய விசாரணையில், கடையில் இருந்த 5 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் 2 பவுன் தங்க காசுகள் திருடப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் கடையின் உள்ளே இருந்த கண்காணிப்பு கேமிராவின் ஹார்ட் டிஸ்க்கும் திருடப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், பேக்கரிக்கு எதிரே பழக்கடை நடத்தி வரும் மதியழகன் என்பவரை போலீசார் விசாரித்ததில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய பைக் ஒன்றை மதியழகன் வாங்கியுள்ளார். திடீரென அவருக்கு ஆடம்பரமான பைக் கிடைத்தது எப்படி என விசாரித்ததில் பேக்கரியில் கொள்ளையடித்ததை  ஒப்புக்கொண்டுள்ளார். தனது காதலியை மகிழ்விக்க பேக்கரியில் பணத்தை திருடி புதிய பைக் வாங்கியதாகவும், காதலிக்கு தங்க சங்கிலி வாங்கி கொடுத்ததாகவும் தெரிவித்தார். இதனையடுத்து மதியழகனை கைது செய்த போலீசார் பைக் மற்றும் நகைகளை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. முதலமைச்சர் பதவி விலகக் கோரி ஆளுங்கட்சி எம்.எல்.ஏ போர்க்கொடி
புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி பதவி விலக வேண்டுமென ஆளும் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் தனவேலு கோரிக்கை விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2. புதுச்சேரி திலாஸ்பேட்டையில் துணிகரம்: அடகு கடையில் 8 கிலோ நகைகள் கொள்ளை
புதுவை திலாஸ்பேட்டையில் பூட்டுக்களை உடைக்காமலே நகை அடகு கடையில் 8 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.
3. எந்த தியாகத்தையும் செய்ய தயார்; புதுச்சேரியில் குடியுரிமை சட்டத்தை அனுமதிக்க மாட்டோம் - முதல்-அமைச்சர் நாராயணசாமி உறுதி
புதுச்சேரியில் குடியுரிமை சட்டத்தை அனுமதிக்க மாட்டோம். அதற்காக எந்த தியாகத்தையும் செய்ய தயார் என காங்கிரஸ் பேரணியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
4. புதுச்சேரியில் வளைய சூரிய கிரகணம் - ஏராளமான பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்
புதுவை கடற்கரையில் வளைய சூரிய கிரகணத்தை ஏராளமான பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்.
5. புதுச்சேரி கடல் வழியாக இலங்கை தமிழர்களை ஆஸ்திரேலியாவுக்கு கடத்த முயற்சியா? போலீசார் திடீர் சோதனை- பரபரப்பு
புதுச்சேரி வழியாக இலங்கை தமிழர்களை ஆஸ்திரேலியாவுக்கு கடத்திச் செல்ல முயற்சிப்பதாக தகவல் பரவியதால் போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.