புதுச்சேரியில் உள்ள காமராஜர் நகர் 10ம் எண் வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு


புதுச்சேரியில் உள்ள காமராஜர் நகர் 10ம் எண் வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு
x
தினத்தந்தி 8 May 2019 9:06 PM IST (Updated: 8 May 2019 9:06 PM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் உள்ள காமராஜர் நகர் 10ம் எண் வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

புதுச்சேரி,

புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் உள்ள காமராஜர் நகர் 10ம் எண் வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் இன்று உத்தரவிட்டு உள்ளது.

புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் உள்ள காமராஜர் நகர் 10ம் எண் வாக்குச்சாவடியில் முறைகேடுகள் நடந்துள்ளன என புகார் எழுந்தது.  இதனை தொடர்ந்து வருகிற மே 12ந்தேதி இந்த வாக்கு சாவடியில் மறு வாக்கு பதிவு நடத்த புதுச்சேரி தேர்தல் அதிகாரி மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரி ஆகியோருக்கு கடிதம் வழியே தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.

இந்த தேர்தல் அன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவடையும்.

Next Story