‘பயங்கரவாதத்துக்கு ஆதரவை நிறுத்தாவிட்டால் தண்ணீர் தர மாட்டோம்’ - பாகிஸ்தானுக்கு கட்காரி எச்சரிக்கை


‘பயங்கரவாதத்துக்கு ஆதரவை நிறுத்தாவிட்டால் தண்ணீர் தர மாட்டோம்’ - பாகிஸ்தானுக்கு கட்காரி எச்சரிக்கை
x
தினத்தந்தி 9 May 2019 2:30 AM IST (Updated: 9 May 2019 1:52 AM IST)
t-max-icont-min-icon

பயங்கரவாதத்துக்கு ஆதரவை நிறுத்தாவிட்டால் தண்ணீர் தர மாட்டோம் என பாகிஸ்தானுக்கு கட்காரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமிர்தசரஸ்,

மத்திய மந்திரி நிதின் கட்காரி பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் பா.ஜனதா வேட்பாளர் ஹர்தீப் புரியை ஆதரித்து நேற்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

பாகிஸ்தானுக்கு அமைதியின் அடிப்படையில் இந்தியா தண்ணீர் வழங்கும் ஒப்பந்தத்தை 1960-ல் ஏற்படுத்தியது. ஆனால் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் பயங்கரவாதம் தொடர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம். பாகிஸ்தான் அரசு பயங்கரவாதத்துக்கு ஆதரவு தருவதை நிறுத்தாவிட்டால் அந்த நாட்டுக்கு தண்ணீர் வழங்குவதை தடுத்து நிறுத்துவோம். இவ்வாறு அவர் பேசினார்.

Next Story