போபால்: திக்விஜய் சிங் வெற்றிக்காக கம்ப்யூட்டர் பாபா நடத்திய சிறப்பு யாகம் - தேர்தல் ஆணையம் விசாரணை
போபால் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திக்விஜய் சிங்கிற்காக, கம்ப்யூட்டர் பாபா சிறப்பு பூஜை நடத்தியது குறித்து தேர்தல் ஆணையம் விசாரணையை தொடங்கியது.
போபால்
இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 5 கட்ட தேர்தல் வாக்குப்பதிவுகள் முடிவடைந்துள்ளது. இந்நிலையில், தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடித்து வருகிறது. இதை தொடர்ந்து, வரும் 12 மற்றும் 19 ஆம் தேதிகளில் முறையே ஆறாம் மற்றும் ஏழாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், போபாலில் புகழ்பெற்ற ஹிந்து சாமியார் கம்ப்யூட்டர் பாபாவின் 'ஹயோயாக்' நிகழ்ச்சியில் ஒரு விசாரணை தொடங்கியது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் வேட்பாளர் திக்விஜய் சிங் வெற்றிபெறுவதை உறுதி செய்வதற்காக, போபாலில் கம்ப்யூட்டர் பாபா 'ஹயோயாக்' யாகம் நடத்தினார்.
கடந்த செவ்வாய்கிழமை மத்திய பிரதேச மாநிலம், போபால் லோக்சபா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் திக்விஜய் சிங்கிற்கு ஆதரவாக கம்ப்யூட்டர் பாபா என்ற சாமியார், 1000-க்கும் மேற்பட்ட சாதுக்களை வரவழைத்து, திக்விஜய் சிங்கிற்காக பிரசாரம் செய்தார். பிரசாரத்திற்கு முன்னதாக சிறப்பு பூஜை ஒன்றை அவர் நடத்தினார். அதில் திக்விஜய் சிங்கும் கலந்து கொண்டார்.
மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட தேர்தல் ஆணையர் சுதாமா காடே மற்றும் புகார் கொடுத்த பாஜக வேட்பாளர் ஆகியோர் இந்த விஷயத்தில் தேர்தல் ஆய்வாளர்கள் ஈடுபடுவார்கள் என்றனர். கம்ப்யூட்டர் பாபா 'ஹயோயாக்' செய்தது குறித்து தேர்தல் ஆணையம் விசாரணை செய்யும்.
திக்விஜய்சிங் கலந்து கொள்ள கம்ப்யூட்டர் பாபா அழைப்பை விடுத்தாரா என்று தேர்தல் ஆணையம் விசாரணை செய்யும். கம்யூனிஸ்ட் கட்சியினர் எந்த கட்சிக்காக பிரசாரம் செய்கிறார்கள் மற்றும் அவர்களுடைய திட்டங்களில் எவ்வளவு பணம் செலவழிக்கிறார்கள் என்பதை தேர்தல் ஆணையம் தெரிந்து கொள்ள விரும்பும் மூன்றாவது முக்கியமான விஷயமாகும்.
Related Tags :
Next Story