வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவிலில் 14-ந் தேதி நடைதிறப்பு
சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதமும் நடை திறக்கப்பட்டு, 5 நாட்கள் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
திருவனந்தபுரம்,
சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதமும் நடை திறக்கப்பட்டு, 5 நாட்கள் சிறப்பு பூஜைகள் நடைபெறும். அதன்படி வைகாசி மாத பூஜைக்காக, சபரிமலை அய்யப்பன் கோவிலில் 14-ந் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை காட்டுவார். அன்றைய தினம் மற்ற சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது.
15-ந் தேதி அதிகாலை நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகளுடன் நெய் அபிஷேகம், உதயாஸ்தமன பூஜை, களபாபிஷேகம், சகஸ்ர கலச பூஜை உள்பட அனைத்து பூஜைகளும் நடைபெறும். 5 நாட்கள் நடைபெறும் சிறப்பு பூஜைகளுக்கு பின் 19-ந் தேதி இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும்.
பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு ஜூன் 11-ந் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். 12-ந் தேதி பிரதிஷ்டை சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெறும். மீண்டும் ஆனி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை ஜூன் மாதம் 15-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும். 20-ந் தேதி வரை 5 நாட்கள் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
Related Tags :
Next Story