ராகுல் காந்தியின் குடியுரிமை குறித்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
ராகுல் காந்தியின் குடியுரிமை தொடர்பான வழக்கை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.
புதுடெல்லி,
காங்கிரஸ் தலைவரும், அமேதி, வயநாடு தொகுதிகளின் வேட்பாளருமான ராகுல் காந்தி இங்கிலாந்து குடியுரிமை வைத்திருப்பதாக இந்து மகா சபாவை சேர்ந்த ஜெய் பகவான் கோயல் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பாக அவர் தனது மனுவில் கூறியிருந்ததாவது:-
இங்கிலாந்து நாட்டில் நிறுவனங்களுக்கான பதிவாளர் அலுவலகத்தில் பேக்கப்ஸ் லிமிடெட் என்ற நிறுவனம் தாக்கல் செய்த ஆவணங்களில், ராகுல் காந்தி இங்கிலாந்து குடியுரிமை பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ராகுல்காந்தி இந்திய குடிமகனாக இல்லாத நிலையில் அமேதியிலும், வயநாட்டிலும் தேர்தலில் போட்டியிடும் தகுதியை அவர் இழக்கிறார்.
எனவே இந்த விவகாரத்தில் கோர்ட்டு தலையிட்டு ராகுல் காந்தியின் அமேதி மற்றும் வயநாட்டில் தாக்கல் செய்த 2 வேட்பு மனுக்களை நிராகரிக்குமாறு தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும். அவருடைய குடியுரிமை தொடர்பாக முடிவு எடுக்கும் வரை வாக்காளர் பட்டியலில் இருந்து அவருடைய பெயரை நீக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சீவ் கன்னா ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. இதில் விசாரணை துவங்கியதும் தலைமை நீதிபதி, “ஏதோ ஒரு நிறுவனம் ஏதோ ஒரு படிவத்தில் ராகுல் காந்தியை இங்கிலாந்து குடிமகன் என்று கூறுவதால் அவர் அந்த நாட்டு குடிமகன் ஆகிவிடுவாரா?” என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு மனுதாரர் தரப்பில், “ஆனால் ராகுல் காந்தி பிரதமர் ஆவதற்கு ஆசைப்படுகிறார்” என்று கூறப்பட்டது.
இதற்கு நீதிபதிகள் 100 கோடி மக்கள் உள்ள இந்த நாட்டில் எல்லோரும் பிரதமராக ஆசைப்படலாம். உங்களுக்கு ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டால் நீங்கள் பிரதமராக விரும்பமாட்டீர்களா? அப்படி ஆசைப்படுவது மிகவும் ஆரோக்கியமான விஷயம் இல்லையா? என்று கேள்வி எழுப்பினர்.
பின்னர் இந்த மனுக்களை தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
முன்னதாக அமேதி தொகுதி சுயேச்சை வேட்பாளரான துருவ் லால், ராகுல்காந்தியின் குடியுரிமை தொடர்பாக அளித்த இதுபோன்ற புகாரை தேர்தல் கமிஷன் நிராகரித்ததுடன், ராகுல் காந்தியின் வேட்பு மனுக்களையும் ஏற்றுக்கொண்டது.
அதேநேரம் இந்த விவகாரத்தில் பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி அளித்த புகாரின் அடிப்படையில் ராகுல் காந்திக்கு உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story