தேசிய செய்திகள்

எம்.எல்.ஏ. பிரபுவுக்கு சபாநாயகர் அனுப்பிய நோட்டீசுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை + "||" + For the MLA's Lord To the notice sent by the Speaker Supreme Court interim ban

எம்.எல்.ஏ. பிரபுவுக்கு சபாநாயகர் அனுப்பிய நோட்டீசுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை

எம்.எல்.ஏ. பிரபுவுக்கு சபாநாயகர் அனுப்பிய நோட்டீசுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை
அதிமுக அதிருப்தி கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபுவுக்கு சபாநாயகர் அனுப்பிய நோட்டீசுக்கு இடைக்கால தடை விதித்தது சுப்ரீம் கோர்ட்.
புதுடெல்லி,

அ.தி.மு.க. கொறடா ராஜேந்திரன் சமீபத்தில் சபாநாயகர் ப.தனபாலிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக செயல்படும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களான ரத்தின சபாபதி (அறந்தாங்கி), கலைச்செல்வன் (விருத்தாசலம்), பிரபு (கள்ளக்குறிச்சி) ஆகிய 3 பேர் மீதும் கட்சித்தாவல் தடை சட்டத்தின்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.  

இந்த புகாருக்கு 7 நாட்களுக்குள் நேரில் விளக்கம் அளிக்குமாறு கோரி அந்த 3 எம்.எல்.ஏ.க்களுக்கும் சபாநாயகர் ப.தனபால் கடந்த மாதம் 30-ந் தேதி நோட்டீஸ் அனுப்பினார். சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பிய சில மணி நேரத்தில் தி.மு.க. சார்பில், சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது தொடர்பாக சட்டசபை செயலாளரிடம் மனு அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், எம்.எல்.ஏ.க்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் கடந்த வாரம் ஒரு மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை ஏற்று கொண்ட சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள்  2 எம்.எல்.ஏ.க்களுக்கும் சபாநாயகர் அனுப்பிய நோட்டீசுக்கு இடைக்கால தடை விதித்தனர்.

அத்துடன், மனுவின் மீது பதில் அளிக்க சபாநாயகர் ப.தனபாலுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

இதை தொடர்ந்து சபாநாயகர் அனுப்பிய நோட்டீசுக்கு எதிராக கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு சுப்ரீம் கோர்ட்டில் தனியாக மனுதாக்கல் செய்தார்.

அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள்  பிரபு எம்.எல்.ஏ.க்கு சபாநாயகர் அனுப்பிய நோட்டீசுக்கு நீதிபதிகள் இடைக்கால தடை விதித்தனர். ஜூலை 12 ந்தேதிக்குள் சபாநாயகர் ப.தனபால் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். பின்னர் வழக்கை  தள்ளி வைத்தனர். 

தொடர்புடைய செய்திகள்

1. சில தினங்களில் காஷ்மீரில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
ஜம்மு காஷ்மீர் கட்டுப்பாடுகளை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்த மனு மீது இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்து விட்டது.
2. சுப்ரீம் கோர்ட்டில் அயோத்தி வழக்கு தினசரி விசாரணை தொடங்கியது
அயோத்தி வழக்கின் தினசரி விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நேற்று தொடங்கியது.
3. கோவை சிறுமி பாலியல் வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனையை உறுதி செய்தது சுப்ரீம் கோர்ட்
கோவையை சேர்ந்த பள்ளி சிறுமி உள்பட 2 பேரை கடத்தி கொலை செய்த வழக்கில் குற்றவாளி மனோகரனுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது.
4. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகள் மாநில மொழிகளில் வெளியீடு - தமிழுக்கு இடமில்லை
சுப்ரீம் கோர்ட்டின் முக்கியமான தீர்ப்புகள் மாநில மொழிகளில் வெளியிடப்பட்டன. இதில் தமிழ் இடம்பெறாததால் பெரும் ஏமாற்றம் ஏற்பட்டு உள்ளது.
5. சுப்ரீம் கோர்ட்டில் 4 நீதிபதிகள் பதவி ஏற்பு
சுப்ரீம் கோர்ட்டில் புதிதாக 4 நீதிபதிகள் நேற்று பதவி ஏற்றனர்.