எல்லையில் பதற்றத்தை தணிக்க வேண்டும்: இந்தியாவுக்கு பாகிஸ்தான் வலியுறுத்தல்
எல்லையில் பதற்றத்தை தணிக்க வேண்டும் என்று இந்தியாவை பாகிஸ்தான் கேட்டுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இஸ்லமாபாத்,
புல்வாமா தாக்குதல் மற்றும் அதைத் தொடர்ந்து இந்திய விமானப்படை பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் நடத்திய வான்வழி தாக்குதல்களுக்கு பிறகு இந்தியா - பாகிஸ்தான் இடையே முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பதற்றம் அதிகரித்தது. எல்லையில், இரு நாட்டு ராணுவமும் அவ்வப்போது துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டு வருகின்றன. நிகழாண்டில் மட்டும் 982 முறை எல்லை தாண்டிய துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது.
இந்த சூழலில், எல்லையில் பதற்றத்தை தணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியாவுக்கு பாகிஸ்தான் கோரிக்கை விடுத்துள்ளதாக ஆங்கில தொலைக்காட்சி வெளியிட்ட செய்தி ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராணுவம் மற்றும் தூதரகம் வாயிலாக பாகிஸ்தான் இந்த கோரிக்கையை விடுத்ததாகவும், எனினும் பாகிஸ்தான் பயங்கரவாதத்துக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, எல்லையில் பதற்றம் தணியும் என்று இந்தியா திட்டவட்டமாக தெரிவித்ததாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story