‘செல்பி’ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதால் போலீஸ்காரரின் தபால் ஓட்டு நிராகரிப்பு


‘செல்பி’ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதால் போலீஸ்காரரின் தபால் ஓட்டு நிராகரிப்பு
x
தினத்தந்தி 10 May 2019 9:15 PM GMT (Updated: 10 May 2019 8:57 PM GMT)

‘செல்பி’ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதால், போலீஸ்காரரின் தபால் ஓட்டு நிராகரிக்கப்பட்டது.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் மண்டியா நாடாளுமன்ற தொகுதியில் கடந்த மாதம் தேர்தல் நடைபெற்றது. அந்த தொகுதியை சேர்ந்த மத்திய ரிசர்வ் படை போலீஸ்காரர் ஒருவர், தபால் ஓட்டு போட்டார். சுயேச்சை வேட்பாளர் நடிகை சுமலதாவுக்கு ஓட்டு போட்டு விட்டு, அதை ‘செல்பி’ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்.

இதுகுறித்து மாநில தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து, 23-ந் தேதி ஓட்டு எண்ணிக்கையின்போது, அந்த தபால் ஓட்டை நிராகரித்து விடுமாறு மண்டியா தேர்தல் அதிகாரிக்கு தலைமை தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

Next Story