கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் தொழில் துறை உற்பத்தி மார்ச் மாதம் சரிவு


கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் தொழில் துறை உற்பத்தி மார்ச் மாதம் சரிவு
x
தினத்தந்தி 11 May 2019 3:00 AM IST (Updated: 11 May 2019 2:33 AM IST)
t-max-icont-min-icon

கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் தொழில் துறை உற்பத்தி இந்த ஆண்டு மார்ச் மாதம் சரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

நாட்டின் தொழில்துறை உற்பத்தி குறித்த புள்ளி விவரங்களை மத்திய புள்ளியில் மற்றும் திட்ட செயலாக்கத்துறை அமைச்சகம் வெளியிட்டு இருக்கிறது. இதில் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு மார்ச் மாத உற்பத்தி குறியீடு 0.1 சதவீதம் குறைந்திருப்பதாக கூறப்பட்டு உள்ளது.

இது கடந்த 21 மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைவு என கூறியுள்ள அமைச்சகம், உற்பத்தி துறையில் நுகர்வு மற்றும் முதலீட்டு நடவடிக்கைகள் மந்தமானதே இதற்கு காரணம் என கூறியுள்ளது. இதற்கு முன்னர் கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் 0.3 சதவீதம் அளவுக்கு குறைந்து இருந்ததாக மத்திய அரசு கூறியுள்ளது.

இதைப்போல ஆண்டு அளவிலான ஒட்டுமொத்த உற்பத்தியிலும் 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த 2018-19-ம் ஆண்டு உற்பத்தி 3.6 சதவீதம் அளவுக்கு சரிந்திருப்பதாகவும் கணக்கிடப்பட்டு உள்ளது. இது முந்தைய ஆண்டு 4.4 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story