சீக்கியர்களுக்கு எதிரான கலவரம்: சாம் பிட்ரோடாவின் கருத்து காங்கிரசின் ஆணவத்தை காட்டுகிறது - பிரதமர் மோடி குற்றச்சாட்டு
சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் பற்றிய சாம் பிட்ரோடாவின் கருத்து, காங்கிரசின் ஆணவத்தை காட்டுகிறது என்று பிரதமர் மோடி கூறினார்.
ரோதக்,
அரியானா மாநிலம் ரோதக்கில் நேற்று பா.ஜனதா தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. அதில் கலந்துகொண்ட பிரதமர் மோடி பேசியதாவது:-
காங்கிரசின் உயர்ந்த தலைவர்களில் ஒருவர், 1984-ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் குறித்து உரத்த குரலில் பேசியுள்ளார். அவர் யார் என்று தெரியுமா? அவர் இந்திரா குடும்பத்துக்கு நெருக்கமானவர். ராஜீவ் காந்திக்கு மிக நல்ல நண்பர். காங்கிரஸ் பரம்பரை தலைவரான ராகுல் காந்தியின் குரு ஆவார்.
அந்த கலவரம் பற்றி கேட்டதற்கு “அது 1984-ல் நடந்தது. அதற்கு என்ன?” என்று அவர் கேட்டுள்ளார்.
இந்த நாட்டை அதிக காலம் ஆண்ட காங்கிரஸ் கட்சி எப்படி உணர்வின்றி இருந்தது என்பதை இந்த வார்த்தைகள் பிரதிபலிக்கின்றன.
காங்கிரஸ் கட்சியை நடத்துபவர்களின் ஆணவம் எப்படி இருக்கிறது என்பதை இந்த வார்த்தைகள் மூலம் புரிந்து கொள்ளலாம். அக்கட்சியின் மனநிலையையும், குணநலனையும் இது காட்டுகிறது. இவ்வாறு மோடி பேசினார்.
இதற்கிடையே, இதே விவகாரம் குறித்து மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில், “சீக்கியர்கள் படுகொலை குறித்து காங்கிரஸ் கட்சி அனுதாபம் காட்டாதது மிகவும் அவமானகரமானது. சீக்கியர் படுகொலையை இழிவுபடுத்திய சாம் பிட்ரோடாவை ராகுல் காந்தி வெளியேற்ற தயாரா?” என்று அவர் கூறியுள்ளார்.

Related Tags :
Next Story