பா.ஜனதாவினர் பெட்டி, பெட்டியாக பணம் கொண்டுவருகிறார்கள் - மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு


பா.ஜனதாவினர் பெட்டி, பெட்டியாக பணம் கொண்டுவருகிறார்கள் - மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 10 May 2019 11:03 PM GMT (Updated: 10 May 2019 11:03 PM GMT)

பா.ஜனதாவினர் பெட்டி, பெட்டியாக பணம் கொண்டுவருவதாக மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.

அசோக்நகர்,

மேற்கு வங்காள மாநிலம் அசோக்நகரில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி தேர்தல் பிரசாரத்தின்போது கூறியதாவது:-

பா.ஜனதா கட்சியினர் மற்ற மாநிலங்களில் இருந்து பெட்டி பெட்டியாக பணம் கொண்டுவருகிறார்கள். ஒரு பா.ஜனதா வேட்பாளரிடம் நேற்று கோடிக்கணக்கில் பணம் கைப்பற்றப்பட்டது. இன்றும் உயர் போலீஸ் பாதுகாப்பில் இருக்கும் பா.ஜனதா தலைவர்கள் பெட்டி நிறைய பணம் கொண்டுவந்தனர். இந்த பணம் அவர்களுக்கு எங்கிருந்து வந்தது.

அந்த பணத்தை இங்குள்ள குண்டர்களிடம் கொடுத்து ஓட்டுகளை திருட நினைக்கிறார்கள். தேர்தல் கமி‌ஷன் அவர்கள் மீது ஏன் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. பணம் உங்களுக்கு வெற்றியை தேடித்தராது. இந்த பணம் உயர் பண மதிப்பு இழப்பின்போது சம்பாதிக்கப்பட்டதா? ரபேல் ஊழலில் எவ்வளவு பணம் கிடைத்தது? இவ்வாறு அவர் கூறினார்.

Next Story