உண்மையை திரித்து கூறுவதா? பா.ஜனதாவுக்கு சாம் பிட்ரோடா கண்டனம்
சீக்கியர் கலவரம் குறித்த தனது கருத்து திரித்து கூறப்பட்டுள்ளதாக பாஜகவுக்கு சாம் பிட்ரோடா கண்டனம் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
காங்கிரஸ் மூத்த தலைவர் சாம் பிட்ரோடா, சீக்கியர் படுகொலை பற்றிய கேள்விக்கு “அது 1984-ல் நடந்தது. அதற்கு என்ன?” என்று கேட்டதை, பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜனதா தலைவர்கள் விமர்சித்தனர்.
இதையடுத்து, இதுகுறித்து சாம் பிட்ரோடா கூறியதாவது:- எனது பேட்டியில் 3 வார்த்தைகளை வைத்து பா.ஜனதா, உண்மையை திரித்து கூறுகிறது. வாய்மையே வெல்லும், பொய் அம்பலமாகும். மக்களை பிளவுபடுத்தி, தங்கள் தோல்வியை மறைப்பதே அவர்களின் நோக்கம். அவர்களிடம் சொல்வதற்கு நேர்மறையான விஷயங்களே இல்லை.
இவையெல்லாம் கடந்த காலத்தில் நடந்தவை. இந்த தேர்தலுக்கு பொருத்தமற்றவை. கடந்த 5 ஆண்டுகளில் மோடி அரசு என்ன செய்தது என்பதைத்தான் பார்க்க வேண்டும். 1984-ம் ஆண்டு, கடினமான நேரத்தில் சீக்கிய சகோதர, சகோதரிகள் அடைந்த வேதனையை நான் உணர்ந்துள்ளேன். அப்போது நடந்த அராஜகங்களால் ஆழ்ந்த வேதனை அடைந்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story