டெல்லியில் ரூ.25 கோடி போதைப்பொருள் பறிமுதல் - வெளிநாட்டினர் 3 பேர் கைது


டெல்லியில் ரூ.25 கோடி போதைப்பொருள் பறிமுதல் - வெளிநாட்டினர் 3 பேர் கைது
x
தினத்தந்தி 12 May 2019 1:00 AM IST (Updated: 12 May 2019 12:32 AM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் ரூ.25 கோடி போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தில், வெளிநாட்டினர் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

புதுடெல்லி,

டெல்லியை அடுத்த நொய்டா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பதுக்கிவைக்கப்பட்டு இருந்த 1,000 கிலோ போதைப்பொருட்களை, போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வெளிநாட்டினர் 3 பேர் கைது செய்யப்பட்டனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் மதிப்பு ரூ.25 கோடி ஆகும். மேலும், அந்த வீடு ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு சொந்தமானது என கூறப்படுகிறது.

Next Story