தேசிய செய்திகள்

தேர்தல் நடைபெறும் மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க. தொண்டர் மர்ம மரணம்; போலீசார் விசாரணை + "||" + West Bengal: BJP worker Raman Singh found dead

தேர்தல் நடைபெறும் மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க. தொண்டர் மர்ம மரணம்; போலீசார் விசாரணை

தேர்தல் நடைபெறும் மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க. தொண்டர் மர்ம மரணம்; போலீசார் விசாரணை
மேற்கு வங்காளத்தில் 6வது கட்ட தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பா.ஜ.க. தொண்டர் மர்ம மரணம் அடைந்தது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
நாடாளுமன்ற மக்களவைக்கான 6வது கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது.  மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க., திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையே கடுமையான போட்டி ஏற்பட்டு உள்ளது.  திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி மற்றும் பிரதமர் மோடி இருவரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்தனர்.

இந்த தேர்தல் பிரசாரத்தில் இரு கட்சிகளும் ஒன்றையொன்று கடுமையாக விமர்சனம் செய்து கொண்டன.  அங்கு இன்று வாக்கு பதிவு நடைபெற உள்ளது.  இதனை முன்னிட்டு வாக்கு பதிவுக்கான பணிகளில் தேர்தல் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் தயாராக உள்ளனர்.

இந்த நிலையில், மேற்கு வங்காளத்தின் ஜக்ராம் நகரில் கோபிபல்லபூர் என்ற பகுதியில் பா.ஜ.க. தொண்டர் ஒருவர் நேற்றிரவு இறந்து கிடந்துள்ளார்.  அவர் ராமன் சிங் என அடையாளம் காணப்பட்டு உள்ளார்.

தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கட்சி தொண்டர் மர்ம மரணம் அடைந்துள்ளது அங்கு பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.  இதனை தொடர்ந்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. திண்டுக்கல்லில் பேருந்து விபத்து: பெண் பலி; 20க்கும் மேற்பட்டோர் காயம்
திண்டுக்கல்லில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் ஒரு பெண் பலியானார்.
2. தொழிலாளி உள்பட 2 பேர் தற்கொலை போலீசார் விசாரணை
தொழிலாளி உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
3. காரிமங்கலம் அருகே துணிகரம் ரூ.1 லட்சம் பழைய மின்கம்பிகள் திருட்டு போலீசார் விசாரணை
காரிமங்கலம் அருகே ரூ.1 லட்சம் மதிப்புள்ள பழைய மின்கம்பிகளை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
4. காணாமல்போன பெண் காவிரி ஆற்றில் பிணமாக மீட்பு தற்கொலையா? போலீசார் விசாரணை
காணாமல்போன பெண் காவிரி ஆற்றில் பிணமாக மீட்கப்பட்டார். இவர் தற்கொலை செய்து கொண்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
5. கச்சிராயப்பாளையம் அருகே, கல்லால் முகத்தை சிதைத்து வாலிபர் படுகொலை - பெண்கள் உள்பட 3 பேரிடம் போலீசார் விசாரணை
கச்சிராயப்பாளையம் அருகே கல்லால் முகத்தை சிதைத்து வாலிபர் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக பெண்கள் உள்பட 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-