தேசிய செய்திகள்

இந்திய கொடி கூடவா இவருக்கு தெரியாது! சர்ச்சையில் சிக்கிய பிரியங்கா காந்தியின் கணவர்! + "||" + Robert Vadra Posts Paraguay Flag Instead of Tricolour, Gets Trolled on Social Media

இந்திய கொடி கூடவா இவருக்கு தெரியாது! சர்ச்சையில் சிக்கிய பிரியங்கா காந்தியின் கணவர்!

இந்திய கொடி கூடவா இவருக்கு தெரியாது! சர்ச்சையில் சிக்கிய பிரியங்கா காந்தியின் கணவர்!
இந்திய கொடிக்கு பதில் வேறு நாட்டு கொடியை ட்விட்டரில் பதிவிட்டு சர்ச்சையில் சிக்கிய பிரியங்கா காந்தியின் கணவர்!
நேற்று 7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கு 6-ம் கட்ட  வாக்குப்பதிவு  நடைபெற்றது. டெல்லியில் உள்ள வாக்குச்சாவடியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா வாக்களித்தார்.

பின்னர் தான்  ஜனநாயக கடமையை ஆற்றிவிட்டதாக செல்பி எடுத்து ட்விட்டரில் வெளியிட்டிருந்தார். அந்த பதிவில், இந்திய நாட்டு கொடிக்கு பதிலாக, பராகுவே நாட்டு கொடியை பதிவிட்டுள்ளார்.

இதை கவனித்த நெட்டிசன்கள்  இந்திய கொடி கூடவா இவருக்கு தெரியாது என்று, ராபர்ட் வதேராவை கடுமையாக கலாய்க்க தொடங்கினர். விமர்சனங்களுக்கு பதிலளித்து ட்வீட் செய்த ராபர்ட் வதேரா, 

”இந்தியா என் இதயத்தில் இருக்கிறது. எனது பதிவில் பராகுவே நாட்டு கொடியை பயன்படுத்தியது கவனக்குறைவால் நடந்த தவறு. இது உங்கள் அனைவருக்கும் புரியும் என்பதும் எனக்கு தெரியும். ஆனாலும் இதை நீங்கள்  சர்ச்சையாக்க முடிவு எடுத்து விட்டீர்கள். இதனை நான் பொருட்படுத்தப்போவதில்லை” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ராபர்ட் வதேரா வெளிநாடு செல்ல டெல்லி நீதிமன்றம் அனுமதி
சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா வெளிநாடு செல்ல டெல்லி நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
2. ராபர்ட் வதேராவுக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்: இன்று ஆஜராக உத்தரவு
சட்ட விரோத பண பரிமாற்ற குற்றச்சாட்டில், விசாரணைக்கு இன்று ஆஜராகுமாறு ராபர்ட் வதேராவுக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.
3. பாஜகவின் ட்விட்டர் பக்கத்தை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
பாஜகவின் ட்விட்டர் பக்கத்தை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 10 லட்சம் பேராக அதிகரித்துள்ளது.