தேர்தல் பிரசாரத்தில் குரல்வளை பாதிப்பு; மருத்துவ சிகிச்சை பெறுகிறார் சித்து


தேர்தல் பிரசாரத்தில் குரல்வளை பாதிப்பு; மருத்துவ சிகிச்சை பெறுகிறார் சித்து
x
தினத்தந்தி 13 May 2019 6:00 PM IST (Updated: 13 May 2019 6:00 PM IST)
t-max-icont-min-icon

தேர்தல் பிரசாரத்தில் தொடர்ந்து கலந்து கொண்டு குரல்வளை பாதிக்கப்பட்ட சித்து மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார்.

சண்டிகர்,

இந்தியாவில் 7 கட்ட நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.  இதில் காங்கிரஸ் கட்சியின் பஞ்சாப் மாநில மந்திரி நவ்ஜோத் சிங் சித்து அனல் பறக்கும் வகையில் தேர்தல் பேரணிகளில் கலந்து கொண்டார்.

அக்கட்சியின் நட்சத்திர பேச்சாளரான அவர் இதுவரை 28 நாட்களில் 80 பேரணிகளில் பங்கேற்று பேசியுள்ளார்.  தொடர்ச்சியாக பேசியதில் அவரது குரல்வளை பாதிப்படைந்து உள்ளது.  இதனால் அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இதுபற்றி அவரது அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில், தொடர்ச்சியான பேச்சால் சித்துவின் குரல்வளை பாதிப்படைந்து விட்டது.  அவருக்கு தீவிர மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  அதிவிரைவில் சிகிச்சை நடைமுறைகள் முடிந்து மீண்டும் பிரசாரத்திற்கு அவர் திரும்புவார் என தெரிவித்து உள்ளது.

Next Story