ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிக்கடன் மோசடி: அமலாக்கத்துறை முன் சாந்தா கோச்சார் ஆஜர்


ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிக்கடன் மோசடி: அமலாக்கத்துறை முன் சாந்தா கோச்சார் ஆஜர்
x
தினத்தந்தி 14 May 2019 3:30 AM IST (Updated: 14 May 2019 2:30 AM IST)
t-max-icont-min-icon

ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிக்கடன் மோசடி தொடர்பாக, அமலாக்கத்துறை முன் சாந்தா கோச்சார் ஆஜரானார்.

புதுடெல்லி,

ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, வீடியோகான் நிறுவனத்துக்கு ரூ.1,875 கோடி கடன் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி சாந்தா கோச்சார், அவரது கணவர் தீபக் கோச்சார் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது.

இந்த விவகாரத்தில் நிதி மோசடி தடுப்புச்சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் கிரிமினல் வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு சாந்தா கோச்சாருக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. அதன்படி நேற்று காலையில் அவர் டெல்லி கான் மார்க்கெட் பகுதியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார்.

அவரிடம் இந்த முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பதிவு செய்து கொண்டனர். இந்த விவகாரத்தில் தீபக் கோச்சாருக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. முன்னதாக அவரது சகோதரர் ராஜீவ் கோச்சாரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story