கேரளாவில் ஜூன் 4-ம் தேதி தொடங்கும், சராசரிக்கு குறைவாகவே மழை பெய்யும் என தகவல்


கேரளாவில் ஜூன் 4-ம் தேதி தொடங்கும், சராசரிக்கு குறைவாகவே மழை பெய்யும் என தகவல்
x
தினத்தந்தி 14 May 2019 5:46 PM IST (Updated: 14 May 2019 5:46 PM IST)
t-max-icont-min-icon

கேரளாவில் ஜூன் 4-ம் தேதி தொடங்கும், சராசரிக்கும் குறைவாக மழை பெய்யும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களுக்கு மழை பொழிவை தரும் தென்மேற்கு பருவமழை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை பெய்யும். இந்தியாவின் விவசாய உற்பத்தியை நிர்ணயிப்பதில் தென்மேற்கு பருவமழை முக்கிய பங்காற்றுகிறது.  இவ்வாண்டு தென்மேற்கு பருவமழை வழக்கத்தைவிட சற்று குறைவாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கேரளாவில் ஜூன் 4-ம் தேதி தொடங்கும், சராசரிக்கும் குறைவாக பெய்யும் என தனியார் வானிலை ஆய்வு மையமான ஸ்கை மேட் தெரிவித்துள்ளது. 

இந்தியாவின் மொத்த மழைப்பொழிவில் 70 சதவீதம் தென்மேற்கு பருவமழை மூலமாகத்தான் கிடைக்கிறது.

Next Story