வரும் 23ம் தேதி எதிர்க்கட்சித் தலைவர்களுடனான ஆலோசனை கூட்டத்திற்காக சோனியா காந்தி கடிதம்


வரும் 23ம் தேதி எதிர்க்கட்சித் தலைவர்களுடனான ஆலோசனை கூட்டத்திற்காக சோனியா காந்தி கடிதம்
x

வரும் 23ம் தேதி நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சித் தலைவர்களுடனான ஆலோசனை கூட்டத்துக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி அழைப்பு விடுத்து கடிதம் எழுதி உள்ளார்.

புதுடெல்லி

 பாராளுமன்ற தேர்தலில் மே 19ம் தேதி  கடைசி கட்ட  வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 7 கட்டங்களாக  பதிவான வாக்குகள் அனைத்தும் வரும் மே 23ம் தேதி எண்ணப்பட உள்ளது. தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளில் தேசிய கட்சிகளான காங்கிரஸ், பாஜக இரண்டிற்கும் பெரும்பான்மை பலம் கிடைக்காது என கூறப்படுகிறது. இதனால்  இரண்டு கட்சிகளும் மாநில கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கும் முனைப்பில் தீவிரம் காட்டி வருகின்றன. 

இதன் ஒரு பகுதியாக காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களுடன், மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகும் அன்று ஆலோசனை நடத்த சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார். மேலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்காத மாநில கட்சிகளான பிஜூ ஜனதாதளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சித் தலைவர்களுக்கும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். 

இது தொடர்பாக ஒவ்வொரு கட்சித் தலைவருக்கும் சோனியா காந்தி தனித்தனியாக கடிதம் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.

Next Story