தேசிய செய்திகள்

தேர்தலுக்கு பின் பா.ஜ.க. அல்லாத ஆட்சி அமைக்க மாநில கட்சிகளுடன் பேச்சு நடத்த தயார்; இந்திய கம்யூனிஸ்டு கட்சி + "||" + After the election, ready to negotiate with state parties to form non-rule; Communist Party of India

தேர்தலுக்கு பின் பா.ஜ.க. அல்லாத ஆட்சி அமைக்க மாநில கட்சிகளுடன் பேச்சு நடத்த தயார்; இந்திய கம்யூனிஸ்டு கட்சி

தேர்தலுக்கு பின் பா.ஜ.க. அல்லாத ஆட்சி அமைக்க மாநில கட்சிகளுடன் பேச்சு நடத்த தயார்; இந்திய கம்யூனிஸ்டு கட்சி
தேர்தலுக்கு பிறகு பா.ஜ.க. அல்லாத ஆட்சி அமைக்க மாநில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி கூறியுள்ளது.
ஐதராபாத்,

நாடாளுமன்றத்துக்கு 6 கட்ட வாக்குப்பதிவு முடிந்த நிலையில், இறுதிக்கட்ட வாக்குப்பதிவு 19ந்தேதி நடக்கிறது. 23ந்தேதி ஓட்டுகள் எண்ணப்படுகின்றன.  இந்த பின்னணியில், தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி அமைக்கும் பணியில் சில அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன.  இதற்காக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களுடனான சந்திப்பு நடந்து வருகிறது.

இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி ஒரு தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: இந்த தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கோ, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கோ பெரும்பான்மை கிடைக்காது. அத்தகைய சூழ்நிலையில் மாநில கட்சிகள்தான் முக்கிய பங்கு வகிக்கும்.

இடதுசாரி கட்சிகள், எந்த விலை கொடுத்தாலும் பா.ஜ.க.வை ஆதரிக்கவும் மாட்டோம், ஆதரவை பெறவும் மாட்டோம். பா.ஜ.க. அல்லாத ஆட்சியையே நாங்கள் விரும்புகிறோம். ஆகவே, பா.ஜ.க. அல்லாத ஆட்சி அமைப்பது தொடர்பாக மாநில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம் என அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. 5 ஆண்டுகளில் 3 கட்சிகள் மாறியவரா உங்களுக்கு நன்மை செய்வார்? தி.மு.க. வேட்பாளர் செந்தில்பாலாஜி மீது எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு
5 ஆண்டுகளில் 3 கட்சிகள் மாறியவரா உங்களுக்கு நன்மை செய்வார்? என அரவக்குறிச்சி தேர்தல் பிரசாரத்தில் தி.மு.க.வேட்பாளர் செந்தில்பாலாஜி மீது எடப்பாடி பழனிசாமி கடுமையாக சாடி பேசினார்.
2. அரவக்குறிச்சி தொகுதியில் தி.மு.க.வுக்கு டெபாசிட் கிடைக்காது பிரசாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு
அரவக்குறிச்சியில் தி.மு.க.வுக்கு டெபாசிட் கிடைக்காது என பிரசாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.
3. தமிழகத்தில் மாநில சுயாட்சியின் கீழ் தி.மு.க. ஆட்சி அமைவது உறுதி அரவக்குறிச்சியில் வைகோ பேச்சு
நீட் தேர்வு உள்ளிட்டவற்றில் பறிபோன உரிமைகளை மீட்டெடுக்க தமிழகத்தில் மாநில சுயாட்சியை முன்னிலைப்படுத்தி தி.மு.க. ஆட்சி அமையும் என அரவக்குறிச்சியில் ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ பேசினார்.
4. தேர்தலின் போது பிடிபட்ட பணத்தின் புகலிடம்?
நாடாளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதை தடுக்கும் முயற்சியில் வருமானத்துறை அதிகாரிகள் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
5. தேர்தலில் யாருக்கு ஓட்டு? - இயக்குனர்கள் பார்த்திபன், சேரன், முருகதாஸ் கருத்து
தேர்தலில் யாருக்கு ஓட்டு போடுவது என்பது குறித்து இயக்குனர்கள் பார்த்திபன், சேரன், முருகதாஸ் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.